LOADING...
'கச்சத்தீவை எக்காரணத்திற்கும் இந்தியாவிடம் ஒப்படைக்கமாட்டோம்': இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க திட்டவட்டம்
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க

'கச்சத்தீவை எக்காரணத்திற்கும் இந்தியாவிடம் ஒப்படைக்கமாட்டோம்': இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க திட்டவட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2025
02:20 pm

செய்தி முன்னோட்டம்

கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கச்சத்தீவுக்கு அவர் மேற்கொண்ட திடீர் பயணத்தின் போது அங்குள்ள மீனவர்களிடம் உரையாற்றிய அவர், எந்தவொரு அழுத்தத்துக்கும் இலங்கை அரசு அடிபணியாது என்றும் உறுதி அளித்தார். இலங்கை அதிபர் ஒருவர் முதல்முறையாக கச்சத்தீவுக்கு நேரில் சென்ற நிகழ்வாகும் இது. யாழ்ப்பாணத்தில் இருநாள் பயணமாக வந்த திசநாயக்க, வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்ததையடுத்து, நேற்று மாலை 5 மணிக்கு நான்கு ரோந்து படகுகளுடன் கச்சத்தீவுக்கு பயணித்தார். அங்கு உள்ள மீனவ மக்களுடன் நேரடியாக சந்தித்து உரையாடினார்.

உரிமை

"இலங்கை நிர்பந்தங்களை ஏற்காது": திசநாயக்க

"கச்சத்தீவை இந்தியாவிடம் திருப்பி கொடுக்க வேண்டுமென எந்தவிதமான அளவிலும் பேச்சு நடத்தப்படவில்லை. இலங்கை நிர்பந்தங்களை ஏற்காது. தமிழக மீனவர்களைப்பற்றிய விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை எடுக்க இலங்கை அரசு தயாரில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் எளிதில் விடுவிக்கப்பட மாட்டாது." என சூளுரைத்தார். இலங்கை அதிபரின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் முத்தரசன்,"இது இருநாட்டு உறவுகளை பாதிக்கும் வகையில் ஆபத்தான பேச்சு. தமிழக மீனவர்களின் உரிமைகளை ஆவலுடன் காப்பாற்ற வேண்டிய நேரத்தில், இலங்கை அதிபர் எதிர்மறை கருத்துகள் தெரிவிப்பது வருத்தத்திற்குரியது." எனக்கூறினார்.