உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

இந்தியாவின் யூடியூப் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கன்டென்ட் கிரியேட்டர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது

பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபல கன்டென்ட் கிரியேட்டர்களுக்குச் சொந்தமான 16 யூடியூப் சேனல்களை இந்திய அரசு கடந்த மாதம் முடக்கியது.

05 May 2025

இஸ்ரேல்

காசாவை முழுவதுமாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: அதிகாரிகள் தகவல்

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு அங்கு தங்கும் திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான்

26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவிடம் சமாதானக் கொடியை நீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

05 May 2025

ஐநா சபை

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.

'பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்': வெளிநாட்டுப் படங்களுக்கு 100% வரி விதித்த அமெரிக்கா

அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு பெரிய நடவடிக்கையாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார்.

அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல்

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.

சிங்கப்பூரின் ஆளும் கட்சி புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் அமோக வெற்றி பெற்றது

சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று, புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கீழ் அதன் அரசியல் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன?

முன்னாள் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், ஜனாதிபதி முகமது முய்சுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெடிமருந்துகள் பற்றாக்குறையால் திண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்; பின்னணி என்ன?

உக்ரைன் மற்றும் ஹமாஸிற்கான ரகசிய ஆயுத ஏற்றுமதிகள் காரணமாக, பீரங்கி வெடிமருந்துகளில் கடுமையான குறைவு ஏற்பட்டதாக வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ராணுவத் தயார்நிலை விமர்சன ரீதியாக ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.

03 May 2025

விமானம்

சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய நபர் பயணமா? கொழும்புவில் விமானம் சோதனை

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் இருப்பதாக எச்சரிக்கை வந்ததை அடுத்து, சனிக்கிழமை (மே 3) சென்னையில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை அதிகாரிகள் விரிவான பாதுகாப்பு சோதனை நடத்தினர்.

குறுக்க இந்த கவுசிக் வந்தா? பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவை தாக்க வேண்டும் என பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு தாக்கி பிடிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம்.ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

'அது ரகசியமல்ல': பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட பிலாவல் பூட்டோ

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பயங்கரவாத அமைப்புகளுடனான பாகிஸ்தானின் கடந்தகால உறவுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

அட்டாரி-வாகா எல்லை வாயிலைத் திறந்து, இந்தியாவிலிருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் குறுகிய கால விசாக்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு, பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.

பஹல்காம் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, முக்கியமான ராணுவ வன்பொருள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு ராணுவ விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் முகமது அசிம் மாலிக் நியமனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தற்போதைய தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் முகமது அசிம் மாலிக்கை நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (என்எஸ்ஏ) நியமித்துள்ளது.

இந்தியா வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? 

ஏப்ரல் 30 முதல் மே 23, 2025 வரை, வணிக விமான நிறுவனங்கள் மற்றும் இராணுவ விமானங்கள் உட்பட, பாகிஸ்தானால் பதிவுசெய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தனது வான்வெளியை மூடியது.

01 May 2025

உலகம்

உலக நாடுகளின் இராணுவச் செலவு சாதனை அளவை எட்டியுள்ளது: அறிக்கை

உலகம் இராணுவச் செலவினங்களில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பைச் சந்தித்து வருகிறது. இது ஆண்டுக்கு ஆண்டு 9.4% அதிகரித்து, 2024 ஆம் ஆண்டில் $2.718 டிரில்லியனாக உள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்தியாவுக்கு 'முழு ஆதரவு' வழங்கிய இங்கிலாந்து

பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதால், பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு இங்கிலாந்து அரசாங்கம் அழைப்பு விடுத்தது.

36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை அதிகாலை, நாட்டிற்கு "நம்பகமான உளவுத்துறை" கிடைத்துள்ளதாகவும், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா ஒரு இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் கூறினார்.

சீனாவின் லியாயாங் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

சீனாவின் வடக்கு நகரமான லியாயாங்கில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

29 Apr 2025

லண்டன்

லண்டனில் உள்ள மின்சார துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; 100 தீயணைப்பு வீரர்கள் குவிப்பு

ஐக்கிய இராச்சியத்தின் வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

29 Apr 2025

கனடா

கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி; இந்தியாவிற்கு சாதகமாக அமையுமா?

இந்த மாத தொடக்கத்தில், கனடிய பிரதமர் மார்க் கார்னி, கனடா வாழ் இந்து சமூகத்தினருடன் ராம நவமியைக் கொண்டாடினார்.

29 Apr 2025

வாடிகன்

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7 ஆம் தேதி தொடங்கும்: வாடிகன்

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7 ஆம் தேதி தொடங்கும் என்று ஹோலி சீ பத்திரிகை அலுவலகம் திங்களன்று அறிவித்தது.

29 Apr 2025

கனடா

கனடா தேர்தல்: மார்க் கார்னியின் லிபெரல் கட்சியினர் முன்னிலை 

கனடாவின் 2025 தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. கனடா தேர்தலில் லிபரல்களுக்கும் கன்சர்வேடிவ்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்தியா ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறது; அச்சத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் உடனடி ராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் திங்களன்று (ஏப்ரல் 28) அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தியாவிடம் ஆக்ரோஷம் காட்டினால் அவ்ளோதான்; ராஜாங்க ரீதியில் அணுகுமாறு ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அண்ணன் நவாஸ் ஷெரீப் அட்வைஸ்

இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆக்ரோஷமான நடவடிக்கைகளை கைவிட்டு ராஜாங்க ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) நிறுவனருமான நவாஸ் ஷெரீப், பிரதமரும், தன்னுடைய சகோதரருமான ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

28 Apr 2025

மின்தடை

ஸ்பெயின், போர்ச்சுகலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவைகள் நிறுத்தம்

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தற்போது பெரும் மின்வெட்டை எதிர்கொள்கின்றன, இது அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகளை பாதித்துள்ளது.

28 Apr 2025

ரஷ்யா

உக்ரைன் மீது 3 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்யா அதிபர் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மே 8 முதல் மே 11 நள்ளிரவு வரை "மனிதாபிமான" போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

28 Apr 2025

கனடா

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான நட்பை மீட்டெடுப்பேன்; கனடா பிரதமர் உறுதி

கனடா பிரதமர் வேட்பாளர் மார்க் கார்னி, திங்கட்கிழமை (ஏப்ரல் 28) தேர்தலுக்குப் பிறகு தனது லிபரல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மீட்டெடுப்பதற்கான விருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தானுடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்கா; 'பொறுப்பான தீர்வை' நோக்கிச் செயல்பட வலியுறுத்தல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும், "பொறுப்பான தீர்மானத்தை" நோக்கிச் செயல்பட ஊக்குவிப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

28 Apr 2025

சீனா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் 'நேர்மையான விசாரணை' கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

27 Apr 2025

கனடா

கனடாவில் பயங்கரவாத தாக்குதலா? பொதுமக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததால் பலர் உயிரிழப்பு

கனடாவில் உள்நாட்டு நேரப்படி சனிக்கிழமை (ஏப்ரல் 26) இரவு வான்கூவரில் பிலிப்பைன்ஸ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் லாபு லாபு தின விழாவில் கலந்து கொண்ட கூட்டத்திற்குள் கார் மோதியதில் ஒரு துயர சம்பவம் நடந்தது.

இந்தியாவுடனான மோதலால் மருந்துகளுக்கு சிக்கல்; மாற்று வழியைத் தேடும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மருந்து விநியோகங்களைப் பாதுகாக்க பாகிஸ்தானின் சுகாதார அதிகாரிகள் அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளனர்.

உலகின் முதல் விந்தணு ஓட்டப் பந்தயத்தை நடத்தியது லாஸ் ஏஞ்சல்ஸ்; போட்டியை காண ஆர்வத்துடன் குவிந்த பார்வையாளர்கள்

கருவுறுதல் குறித்த வளர்ந்து வரும் கவலைகளை முன்னிலைப்படுத்த, ஒரு அசாதாரண கவன ஈர்ப்பு நிகழ்வாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகின் முதல் விந்தணு ஓட்டபந்தயத்தை நடத்தியது.

27 Apr 2025

ஈரான்

ஈரானின் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஈரானின் தெற்கு மாகாணத்தில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 750 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

26 Apr 2025

ஈரான்

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 281 பேர் காயம்

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில், குறைந்தது 281 பேர் காயமடைந்ததாக அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்கோனோர் கண்ணீர் அஞ்சலியுடன் நடைபெற்ற போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு

வாடிகனுக்குள் போப்பாண்டவர் அடக்கம் செய்யும் பல தசாப்த கால பாரம்பரியத்திலிருந்து ஒரு பெரிய திருப்புமுனையாக, போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் குற்றம் சாட்டிய வர்ஜீனியா கியூஃப்ரே தற்கொலை

பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் கடத்தலுக்கு எதிராக வெளிப்படையாகப் போராடிய வர்ஜீனியா கியூஃப்ரே, 41 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

'வெளிப்படையான விசாரணைக்கு தயார்': பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மௌனம் கலைத்த பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து தனது மௌனத்தை உடைத்து, துணிச்சலான பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து "நடுநிலை மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு" தயாராக இருப்பதாகக் கூறினார்,