
வெடிமருந்துகள் பற்றாக்குறையால் திண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் மற்றும் ஹமாஸிற்கான ரகசிய ஆயுத ஏற்றுமதிகள் காரணமாக, பீரங்கி வெடிமருந்துகளில் கடுமையான குறைவு ஏற்பட்டதாக வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ராணுவத் தயார்நிலை விமர்சன ரீதியாக ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஆயுதப் படைகள் நான்கு நாட்களுக்கு மட்டுமே அதிக தீவிரம் கொண்ட போரை தாங்க முடியும் என்று ஆய்வாளர்கள் இப்போது எச்சரிக்கின்றனர்.
இது பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் அதன் செயல்பாட்டுத் திறன் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
பிப்ரவரி மற்றும் மார்ச் 2023 க்கு இடையில், 155 மிமீ ஹோவிட்சர் குண்டுகள் மற்றும் 122 மிமீ ராக்கெட்டுகள் உட்பட பல்லாயிரக்கணக்கான வெடிமருந்துகளை பாகிஸ்தான் ரகசிய வழிகள் மூலம் உக்ரைன் மற்றும் ஹமாஸிற்கு அனுப்பியது.
காரணம்
பொருளாதார திண்டாட்டத்தால் விற்பனை
கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான், இந்த ஏற்றுமதி மூலம் 2022-23 ஆம் ஆண்டில் $415 மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது.
அதுவே முந்தைய ஆண்டில் வெறும் $13 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த வருமானத்தில் 80% வரை லாபம் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமை எடுத்துக் கொண்டதாகவும், இந்த நடவடிக்கை தேசிய போர் இருப்புக்களை கடுமையாகக் குறைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த குறைப்பு, வெடிமருந்து பற்றாக்குறை காரணமாக முக்கிய பீரங்கி தளவாடங்களை, M109 ஹோவிட்சர்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட SH-15 மவுண்டட் கன் சிஸ்டம்ஸ் போன்றவற்றை பயனற்றதாக மாற்றியுள்ளது.
பாகிஸ்தானின் ஆழ்ந்த பொருளாதார பின்னடைவு, ரேஷன் குறைப்பு போன்றவற்றால் ராணுவம் தற்போது திண்டாட்டமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.