
இந்தியாவிடம் ஆக்ரோஷம் காட்டினால் அவ்ளோதான்; ராஜாங்க ரீதியில் அணுகுமாறு ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அண்ணன் நவாஸ் ஷெரீப் அட்வைஸ்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆக்ரோஷமான நடவடிக்கைகளை கைவிட்டு ராஜாங்க ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) நிறுவனருமான நவாஸ் ஷெரீப், பிரதமரும், தன்னுடைய சகோதரருமான ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை லாகூரில் இருவரும் சந்தித்துள்ளனர். அங்கு தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சமீபத்திய முடிவுகள் குறித்து ஷேபாஸ் தனது அண்ணனிடம் விளக்கியுள்ளார்.
குறிப்பாக பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்த பிறகு நடந்தவை குறித்து விவரித்துள்ளார்.
ஆக்ரோஷம் வேண்டாம்
இந்தியாவிடம் ஆக்ரோஷம் வேண்டாம் என அட்வைஸ்
பாகிஸ்தானின் பரஸ்பர நடவடிக்கைகள் குறித்து ஷேபாஸ் ஷெரீப் நவாஸிடம் தெரிவித்ததாகவும், எந்தவொரு சாத்தியமான முதலையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.
எனினும், இந்தியாவுடன் ராணுவ ரீதியாக மோதி வெல்ல முடியாது என்பது குறித்த கவலையையும் ஷேபாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, நவாஸ் ஷெரீப் இந்தியாவுடன் மோதல் இல்லாத அமைதியான அணுகுமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நிலைமையை தணிக்க ராஜதந்திர வழிகளில் ஈடுபடுமாறு தனது சகோதரரை வலியுறுத்தினார்.
இருதரப்பு உறவுகள் மேலும் மோசமடைவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.