
இந்தியா ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறது; அச்சத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் உடனடி ராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் திங்களன்று (ஏப்ரல் 28) அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் தனது படைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும், இந்தியாவின் சாத்தியமான நடவடிக்கையை எதிர்பார்த்து மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிப் கூறினார்.
எனினும், அது தொடர்பான குறிப்பிட்ட விவரங்களை வெளியிடாமல், பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என மட்டுமே கூறினார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதை இந்தியா உறுதி செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் அதை மறுத்து நடுநிலையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
விசாரணை
நடுநிலையான விசாரணை
பஹல்காம் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால் 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் பாலகோட் வான்வழித் தாக்குதலுக்கு அதன் அளவிடப்பட்ட பதிலைக் குறிப்பிட்டு, நாட்டின் இறையாண்மையைக் காக்க பாகிஸ்தான் ராணுவம் முழுமையாகத் தயாராக உள்ளது என்பதை வலியுறுத்தினார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் இந்தியாவிடம் ஆக்ரோஷமாக போனால் பாதகம் பாகிஸ்தானுக்கே என அந்நாட்டு அரசை வழிநடத்தும் தனது தம்பியான ஷேபாஸ் ஷெரீப்பை, அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.
மேலும், இந்தியாவை சீண்டுவதை விட்டு, ராஜாங்க ரீதியில் அணுகி பிரச்சினையை முடிக்கவும் ஆலோசனை கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.