தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
நிலவை நோக்கி 4 வீரர்கள்! ஆர்ட்டெமிஸ்-II லான்ச் தேதி அறிவிப்பு; விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்
சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ்-II விண்கலத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்துள்ளது.
இனி 24 மணிநேரம் காத்திருக்க வேண்டாம்! கூகுளின் புதிய சைடுலோடிங் விதியை முறியடிக்க இதோ ஒரு சீக்ரெட் வழி
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களின் பாதுகாப்பிற்காகப் புதிய 'சைடுலோடிங்' (Sideloading) விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
சாட்ஜிபிடியை விட பவர்ஃபுல்! மனிதர்களைப் போலவே சிந்திக்கும் தானியங்கி ஏஐ ஆராய்ச்சியாளர்; ஓபன்ஏஐயின் புதிய North Star திட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓபன்ஏஐ நிறுவனம், இப்போது அதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது.
ஆடம்பர தொழில்நுட்பத்துடன் ₹5 லட்சத்திற்கு வயர்லெஸ் சார்ஜர் வழங்கும் ஹெர்ம்ஸ்
பிரெஞ்சு ஆடம்பர பிராண்டான ஹெர்ம்ஸ், ஆப்பிள் சாதனங்களுக்காக தோலால் போர்த்தப்பட்ட புதிய சார்ஜிங் துணைக்கருவிகளின் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாடிப்படிகளில் ஏறும் டெலிவரி ரோபோக்களை உருவாக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வாங்கிய அமேசான்
புதுமையான படிக்கட்டுகளில் ஏறும் டெலிவரி ரோபோவிற்காக அறியப்பட்ட, சூரிச்சை தளமாகக் கொண்ட தானியங்கி ரோபோடிக்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரிவ்ரை, அமேசான் கையகப்படுத்தியுள்ளது.
போன் நம்பர் தேவையில்லை! 'வாட்ஸ்அப்'பில் வரும் மெகா மாற்றம்
உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது தளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது.
ஸ்மார்ட்போன்களில் ஆதார் ஆப்பை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்; ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆகியவை இணைந்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ஆதார் சேவையை வழங்கும் 'M-Aadhaar' செயலியை கடிகாரம் அல்லது கால்குலேட்டர் போன்ற ஒரு அத்தியாவசியச் செயலியாக முன்கூட்டியே நிறுவி விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
ரீல்ஸ் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் இன்ஸ்டாகிராமின் புதிய 'tap-to-pause' அம்சம்
இன்ஸ்டாகிராம் தனது ரீல்ஸ் பகுதியில் 'தட்டி நிறுத்தும்' (tap-to-pause) என்ற புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம், டிக்டாக் மனநலத்திற்கு மிகவும் மோசமானவை: ஆய்வு
உலக மகிழ்ச்சி அறிக்கையில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை விட இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்கள் மன ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடும் என்று வெளிப்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச ஏஐ பயிற்சி: மார்ச் 23 முதல் வகுப்புகள் தொடக்கம்; விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் இந்தியா ஏஐ மிஷன் திட்டத்தின் கீழ், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்க NIELIT முன்வந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கடலடியில் உள்ள இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான்?
ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் 'டிஜிட்டல் நரம்புகள்' எனப்படும் கடலடி இணைய கேபிள்கள் தற்போது போர்முனையாக மாறியுள்ளன.
2026-ஆம் ஆண்டின் நாசாவின் முதல் விண்வெளி நடை இன்று: எப்போது, எப்படி பார்ப்பது
நாசா, 2026-ஆம் ஆண்டின் தனது முதல் விண்வெளி நடைப்பயணத்தை நடத்த தயாராகிவிட்டது.
விரைவில் உங்கள் வாட்ஸ்அப் கால்களின் போது பின்னணி இரைச்சலை கட்டுப்படுத்தும் வசதி அறிமுகம்
பின்னணி இரைச்சலை தானாகவே ஃபில்டர் செய்வதன் மூலம் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேம்படுத்தும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது.
பெட்ரோல் போட இனி கவலை இல்லை! காற்றிலிருந்தே பெட்ரோல் தயாரிக்கும் சீனா
ஈரானுக்கு எதிரான போர் மற்றும் பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் உலகளாவிய எரிபொருள் சந்தை கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், சீனா தனது எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய மாற்றுகளைக் கண்டறிந்துள்ளது.
'1967-ல் அணு ஆயுத போரை தடுத்த UFO!': அமெரிக்க அதிகாரியின் அதிரடி வாக்குமூலம்
இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில், அமெரிக்காவின் 20 அணு ஆயுத ஏவுகணைகளை மர்மமான வெளிச்சங்கள் (UFO) ஊடுருவி முடக்கியதாகவும், இதன் மூலம் ஒரு பெரும் அணு ஆயுத பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும் முன்னாள் ஏவுகணை ஏவுதள அதிகாரி ராபர்ட் சாலாஸ் தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளியை எரிபொருளாக மாற்றும் புதிய வழிமுறை: விஞ்ஞானிகளின் கணக்கீட்டு முறை வெற்றி!
விஞ்ஞானிகள் சூரிய ஒளியை நேரடியாக எரிபொருளாக மாற்றக்கூடிய வேதிப்பொருட்களை கண்டறியும் பணியை வேகப்படுத்த, ஒரு சக்திவாய்ந்த புதிய கணக்கீட்டு முறையை உருவாக்கியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் பூச்சிகள் மற்றும் ஊர்வன இருக்கிறதா?
செவ்வாய் கிரகத்தில் தேனீக்கள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்கள் இருப்பதாக வல்லுநர் ஒருவர் கூறும் நிலையில், உண்மை நிலவரம் என்ன?
ஆண்ட்ராய்டு டேப்லெட் மற்றும் மடிப்பு போன்களில் கூகுள் குரோம் புதிய 'புக்மார்க் பார்' வசதி!
கூகுள் நிறுவனம் டேப்லட்கள் மற்றும் மடிக்கக்கூடிய போன்களில் உள்ள குரோம் பிரவுசர்களிலும் கணினியில் இருப்பது போன்ற 'புக்மார்க்ஸ் பார்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
90% துல்லியத் தன்மையுடன் மூளைக் கட்டிகளைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை
மூளைக் கட்டிகளை (Brain Tumours) கண்டறிவதில் ஒரு வரலாற்றுச் சாதனையாக, 90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் செயல்படும் புதிய ரத்தப் பரிசோதனையை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமிக்கு மின்சாரம் வழங்க சந்திரனை சுற்றி சோலார் பேனல்களை அமைக்க ஜப்பான் திட்டம்
ஜப்பானிய பொறியியல் நிறுவனமான ஷிமிசு கார்ப்பரேஷன், சந்திரனை சுற்றி ஒரு பெரிய சூரிய சக்தி வளையத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது.
இப்போது Whatsapp அக்கௌன்ட் இல்லாமலும் சாட் செய்யலாம்; எப்படி?
வாட்ஸ்அப் 'Guest chats' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்கள் வாட்ஸ்அப் கணக்கு இல்லாதவர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.
உங்கள் செல்லப் பிராணி சொல்வதைக் கேட்கவில்லையா? பயிற்சியை எளிதாக்கும் 5 மேஜிக் AI ஆப்ஸ்
செல்லப் பிராணிகளைப் பராமரிப்பதும், அவற்றுக்குப் பயிற்சி அளிப்பதும் சில சமயம் சவாலான காரியமாக இருக்கலாம்.
நாசாவின் ஹப்பிள் மற்றும் ஐரோப்பாவின் யூக்ளிட் தொலைநோக்கிகள் படம்பிடித்த அதிசயக் காட்சி
நாசாவின் ஹப்பிள் (Hubble) மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் யூக்ளிட் (Euclid) தொலைநோக்கிகள் இணைந்து, இறந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் இறுதித் தருணங்களை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவுச் சார்பு சிந்தனைத் திறனைப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மீதான அதிகப்படியான சார்பு மனிதர்களின் விமர்சன ரீதியான சிந்தனைத் திறனை (Critical Thinking) மழுங்கடிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வீனஸ் மற்றும் ஜூபிடர் கோள்கள் மிக நெருக்கமாகத் தோன்றும் அரிய நிகழ்வு
வருகிற ஜூன் 9-ம் தேதி வானில் (விண்வெளியில்) ஒரு அபூர்வ நிகழ்வாக வெள்ளி (வீனஸ்) மற்றும் வியாழன் (ஜூபிடர்) ஆகிய இரண்டு பிரகாசமான கோள்களும் மிக நெருக்கமாக அருகருகே இணைந்து தோன்றவுள்ளன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்ல நாய்.. கைவிட்ட மருத்துவர்கள்! AI மூலம் புதிய தடுப்பூசி கண்டுபிடித்துக் காப்பாற்றிய உரிமையாளர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் கன்னிங்ஹாம் என்ற தொழில்நுட்பத் தொழில்முனைவோர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளான சாட்ஜிபிடி மற்றும் ஆல்பாஃபோல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது செல்ல நாய்க்குத் தனிப்பயனாக்கப்பட்ட 'mRNA' தடுப்பூசியைத் தயாரித்து வியக்க வைத்துள்ளார்.
தொழில்முறை ரெஸ்யூம்களை உருவாக்க உதவும் 5 AI டூல்கள்
ரெஸ்யூம் (Resume) என்பது ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க மிகவும் முக்கியமான ஓர் ஆவணமாகும். இது உங்களின் பணி அனுபவத்தையும், திறமைகளையும் தெளிவாகக் காட்டும்.
கூகுள் பிளேஸ்டோரில் இந்தியன் ஆயில் ஒன் செயலி முதலிடம்
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நிலவும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு காரணமாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான 'IndianOil ONE', கூகுள் பிளே ஸ்டோரில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஒரு குரல் கொடுத்தால் போதும்.. டாக்ஸி புக் செய்வது முதல் உணவு ஆர்டர் வரை அனைத்தும் ஆட்டோமேட்டிக்! ஸ்மார்ட்போனில் அசத்தல் அப்டேட்
சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடான கேலக்ஸி S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில், கூகுளின் ஜெமினி ஏஐ உதவியுடன் செயலிகளைத் தானாகவே இயக்கும் 'டாஸ்க் ஆட்டோமேஷன்' வசதி தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
ஸ்பாட்டிஃபை அறிமுகப்படுத்தும் புதிய வசதி, உங்கள் விருப்பப்படி அல்காரிதத்தை மாற்றலாம்!
மியூசிக் ஸ்டிரீமிங் தளமான ஸ்பாட்டிஃபை, பயனர்கள் தங்கள் இசை ரசனையை தாங்களே எடிட் செய்து, பரிந்துரைகளைக் கட்டுப்படுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்ணைத் தொடத் தயாராகும் ககன்யான்! மகேந்திரகிரியில் 22 டன் உந்துவிசை கொண்ட என்ஜின் சோதனை வெற்றி
இந்தியா தனது விண்வெளிப் பயணத்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
பட்டப்படிப்பு முடிப்பதற்குள் ₹9 கோடி சம்பாதிக்கலாம்! இல்லையெனில் கட்டணம் வாபஸ்; ஏஐ பள்ளியின் மெகா ஆஃபர்
கல்வி என்பது இன்று மிக விலையுயர்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலில், அமெரிக்காவின் ஆல்பா பள்ளி முற்றிலும் மாறுபட்ட ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது.
ஹோஸ்டிங் தேவையில்லை, பிரவுசரிலேயே வெப்சைட் உருவாக்கலாம்!
வேர்ட்பிரஸ் நிறுவனம் 'மை வேர்ட்பிரஸ்' (my.WordPress.net) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் எவ்வித தொழில்நுட்ப அறிவும் இல்லாமல், இணைய உலாவியிலேயே நேரடியாக இணையதளங்களை உருவாக்க முடியும்.
பருவநிலை மாற்றத்தால் நீளும் நாட்கள், எப்படி?
பருவநிலை மாற்றம் காரணமாகப் புவியின் சுழற்சி வேகம் குறைந்து, நாட்களின் நீளம் அதிகரித்து வருவதாகப் புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இன்ஸ்டாகிராம் DM-களில் என்கிரிப்ஷன் வசதியை நீக்கும் மெட்டா, என்ன காரணம்?
மெட்டா (Meta) நிறுவனம், தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் (Instagram) நேரடிச் குறுஞ்செய்திகளுக்கான (DMs) 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' வசதியை நீக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மெட்டாவில் 20% ஊழியர்களுக்குக் கல்தா? AI பந்தயத்தில் முந்துவதற்காக எடுக்கப்படும் விபரீத முடிவு
மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 20 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிங்க்ட்இன் ஏஐ அப்டேட்: உங்களுக்குப் பிடித்தமான பதிவுகளை இனி ஏஐ தேர்வு செய்யும்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான லிங்க்ட்இன் (LinkedIn), தங்களது தளத்தில் பயனர்களுக்குத் தேவையான உள்ளடக்கங்களை மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்து வழங்குவதற்காகப் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது.
பை தினத்திற்கு சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்புத்துள்ள கூகுள்
கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் 'π' (Pi) மாறிலியைப் போற்றும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14-ஆம் தேதி 'பை' தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சூப்பர் எல் நினோ எச்சரிக்கை: முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் கொளுத்துமா? முழு விவரம்
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடைவதால் ஏற்படும் எல் நினோ நிகழ்வு, இந்த ஆண்டு மிகவும் வலிமையானதாகவோ அல்லது சூப்பர் எல் நினோவாகவோ இருக்கும் என்று ஐரோப்பிய நடுத்தர கால வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது.
இனி விண்டோஸ் லேப்டாப்பையே கேம் கண்சோல் போலப் பயன்படுத்தலாம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 11 (Windows 11) கணினிகளுக்காக 'எக்ஸ்பாக்ஸ் மோட்' (Xbox Mode) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.