LOADING...
நிலவை நோக்கி 4 வீரர்கள்! ஆர்ட்டெமிஸ்-II லான்ச் தேதி அறிவிப்பு; விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்
ஆர்ட்டெமிஸ்-II லான்ச் தேதி அறிவிப்பு

நிலவை நோக்கி 4 வீரர்கள்! ஆர்ட்டெமிஸ்-II லான்ச் தேதி அறிவிப்பு; விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 22, 2026
07:26 pm

செய்தி முன்னோட்டம்

சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ்-II விண்கலத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்துள்ளது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் மனிதர்கள் பயணிக்கும் முதல் மிஷன் இது என்பதால், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாசாவின் சக்திவாய்ந்த SLS (Space Launch System) ராக்கெட், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட உள்ளது. இந்திய நேரப்படி ஏப்ரல் 2, 2026 அதிகாலை 3:54 மணிக்கு பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வரலாற்றுப் பயணத்தில் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நோக்கம்

ஆர்ட்டெமிஸ்-II மிஷனின் நோக்கம்

ஆர்ட்டெமிஸ்-II மிஷனின் நோக்கம் நிலவில் தரை இறங்குவது அல்ல. மாறாக, நிலவைச் சுற்றி வந்து பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையைத் தாண்டி மனிதர்கள் பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் சோதிப்பதாகும். விண்கலத்தின் உயிர் காக்கும் அமைப்புகள், வழிசெலுத்தல் மற்றும் ஆழமான விண்வெளித் தொடர்புகள் ஆகியவை 10 நாட்களுக்குத் தீவிரமாகச் சோதிக்கப்படும். இந்த மிஷன் வெற்றிகரமாக முடிந்தால், அடுத்து வரும் ஆர்ட்டெமிஸ்-III மூலம் மனிதர்கள் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்குவார்கள். அந்தப் பயணத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு கருப்பினத்தவர் முதன்முறையாக நிலவில் கால் பதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவில் ஒரு நிரந்தரத் தளம் அமைப்பதும், அதன் மூலம் வரும் காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதுமே நாசாவின் நீண்டகாலத் திட்டமாகும்.

Advertisement