LOADING...
போன் நம்பர் தேவையில்லை! 'வாட்ஸ்அப்'பில் வரும் மெகா மாற்றம்
மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது Whatsapp

போன் நம்பர் தேவையில்லை! 'வாட்ஸ்அப்'பில் வரும் மெகா மாற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2026
11:33 am

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது தளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இனி பயனர்கள் தங்களது தொலைபேசி எண்களை பகிராமலேயே மற்றவர்களுடன் உரையாட உதவும் 'யூசர்நேம்' (Usernames) வசதி 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது வாட்ஸ்அப் பயன்படுத்த மொபைல் எண் கட்டாயமாக உள்ள நிலையில், இந்தப் புதிய வசதியின் மூலம் இன்ஸ்டாகிராம் அல்லது டெலிகிராம் போன்று தனித்துவமான 'யூசர் ஐடி' மூலம் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியும். இது பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்துவதுடன், தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை கட்டுப்படுத்த உதவும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விவரங்கள்

விருப்பத் தேர்வு

இந்த வசதி ஒரு விருப்ப தேர்வாகவே வழங்கப்படும். அதாவது, பயனர்கள் தங்களின் போன் நம்பரையே தொடர விரும்பினால் அவ்வாறே வைத்து கொள்ளலாம் அல்லது கூடுதல் பாதுகாப்பு கருதி யூசர்நேம் முறைக்கு மாறிக் கொள்ளலாம். வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குப் பிடித்தமான பெயர்களை (எ.கா: @HDFCBank அல்லது @BenClark) முன்பதிவு செய்யவும் வாட்ஸ்அப் வழிவகை செய்யவுள்ளது. இந்த மாற்றத்திற்காக வணிக நிறுவனங்கள் தங்களது சிஸ்டம்களை 2026 ஜூன் மாதத்திற்குள் அப்டேட் செய்யுமாறு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிறுவனங்களுக்கான விளம்பரச் செய்திகளுக்கு 'டைனமிக் பிரைசிங்' முறையையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.

Advertisement