16 Mar 2025

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் விண்ணப்பம் நிராகரிப்பா? மறுவாய்ப்பு வழங்குகிறது தமிழக அரசு

தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்த 2025-26க்கான பட்ஜெட்டின்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டமணி செந்திலுடன் நடித்த மூத்த தமிழ் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் காலமானார்

வித்தியாசமான நகைச்சுவை வேடங்களுக்கு பெயர் பெற்ற மூத்த தமிழ் நடிகை பிந்து கோஷ், நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார்.

ஐபோனைத் தொடர்ந்து இந்தியாவில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் ஹைதராபாத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

ஐபிஎல்லில் அதிக பரிசுத்தொகை வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸஸா? மும்பை இந்தியன்ஸா?

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) கொல்கத்தா நைட் ரைடர்ஸை (கேகேஆர்) எதிர்கொள்கிறது.

மீண்டும் பலூச் போராளிகள் தாக்குதல்; தற்கொலை குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலி

பலுசிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தியா நியூசிலாந்து இடையே மீண்டும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடக்கம் 

2015 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகள் தடைபட்ட பிறகு, இந்தியாவும் நியூசிலாந்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளன.

கடந்த கால மோதல் இருந்தாலும்... பாகிஸ்தானுடனான உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு

கடந்த கால துரோகங்கள் இருந்தபோதிலும், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் ஞானம் மேலோங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்னும் நான்கு நாட்களுக்கு இதேநிலைதான்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை

மார்ச் 20 வரை தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹோலி வண்ணப்பொடிகளால் கார்களில் படிந்துள்ள கறைகளை அகற்றுவதற்கான டிப்ஸ்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, பெரும்பாலும் வாகனங்களில் கடினமான கறைகளை விட்டுச்செல்கிறது.

புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாவது எப்போது? அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவிப்பு

புஷ்பா திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகத்தின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதுமா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

நீரிழிவு நோய் என்பது உலகளாவிய அளவில் வளர்ந்து வரும் ஒரு சுகாதாரப் பிரச்சினையாகும்.

வீட்டில் உங்கள் வைஃபை வேகம் குறைவாக உள்ளதா? வேகத்தை அதிகரிக்க இதை டிரை பண்ணுங்க

ஒவ்வொரு வீட்டிலும் வைஃபை இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலை மற்றும் ஆன்லைன் கல்வி வழக்கமாகிவிட்டதால் பெரும்பாலான வீடுகளில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

2025இல் விலை  வளர்ச்சி விகிதத்தில் தங்கத்தை வெள்ளி விஞ்சும்; நிபுணர்கள் கணிப்பு

உலகளாவிய முதலீட்டு நிறுவனமான விஸ்டம் ட்ரீயின் அறிக்கையின்படி, விநியோக பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் தொழில்துறை தேவை காரணமாக வெள்ளி விலைகள் வளர்ச்சியின் அடிப்படையில் தங்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் பிற ஊடக நிறுவனங்களுக்கான நிதியைக் குறைத்தது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) மற்றும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பிற சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை பெருமளவில் குறைத்துள்ளது.

ஏஆர் ரஹ்மான் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார்; அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வழக்கமான மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவை சூறையாடிய சூறாவளியால் இரண்டு நாட்களில் 26 பேர் பலி

அமெரிக்கா முழுவதும் வீசிய ஒரு சக்திவாய்ந்த புயலால் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இந்த புயல் மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தீவிரவாதியும் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியுமான அபு கட்டால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

மகளிர் ஐபிஎல் 2025: இரண்டாவது முறையாக பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸுக்கு இப்படியொரு சோகமா?

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி பட்டத்தைக் கைப்பற்றியது.

15 Mar 2025

₹1,112 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் இரண்டு மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை அமைக்கிறது மத்திய அரசு

மத்திய அரசு ₹1,112 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 16) தமிழகத்தில் திருச்சியில் துறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் LVM3-M6 கிரையோஜெனிக் என்ஜினுக்கான வெப்ப சோதனையை வெற்றிகரமாக முடித்தது இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் வரவிருக்கும் LVM3-M6 திட்டத்திற்காக CE20 கிரையோஜெனிக் என்ஜினின் விமான ஏற்பு வெப்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

அதிகரிக்கும் போட்டி; 2026க்குள் மலிவு விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த டெஸ்லா முடிவு

சீன நாட்டின் போட்டித்தன்மை வாய்ந்த மின்சார வாகன சந்தையில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் நோக்கில், டெஸ்லா தனது பிரபலமான மாடல் ஒய்'யின் மிகவும் குறைந்த விலை வேரியண்ட்டை சீனாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

அமீர் கானுடன் புதிய படம்? லோகேஷ் கனகராஜின் கைதி 2 படம் வெளியாக தாமதமாகலாம் என தகவல்

கோலிவுட்டின் முன்னணி திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 2019 ஆம் ஆண்டு வெளியான அவரது வெற்றிப்படமான லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) முக்கிய பகுதியாக இருக்கும் கைதி 2 படத்திற்கு முன் ஒரு புதிய படத்தை இயக்குவது பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

16 ஆண்டுகால சூப்பர் ஓவர் வரலாற்றில் முதல்முறை; மோசமான சாதனை படைத்தது பஹ்ரைன்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் பூஜ்ஜிய ரன்கள் எடுத்த முதல் அணி என்ற துரதிர்ஷ்டவசமான சாதனையை பஹ்ரைன் படைத்துள்ளது.

43 நாட்டினருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா திட்டம் எனத் தகவல்

சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 43 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சீனாவின் உய்குர் மக்களை கட்டாய நாடுகடத்துவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதிப்பு

உய்குர் இனத்தவர்களையும் பிற பாதிக்கப்படக்கூடிய இன அல்லது மதக் குழுக்களையும் சீனாவிற்கு கட்டாயமாக திருப்பி அனுப்புவதில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு அதிகாரிகளை குறிவைத்து அமெரிக்கா புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2025: மார்ச் 22இல் ஈடன் கார்டனில் பிரமாண்டமான தொடக்க விழா; பாலிவுட் நட்சத்திரங்கள் கலைநிகழ்ச்சி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஒரு சிறப்பான தொடக்க விழாவுடன் தொடங்க உள்ளது.

டெல்லி ஏசி வெடிப்பால் அச்சம்; கோடை காலத்திற்கு முன் ஏர் கண்டிஷனர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது எப்படி?

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், பல மாதங்களாக செயல்படாத நிலையில் இருந்த ஏர் கண்டிஷனர்கள் இயக்கப்பட உள்ளன.

சர்வதேச டி20 மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்; போட்டியை எப்படி பார்ப்பது?

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) சர்வதேச டி20 மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) 2025 இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸை எதிர்கொள்ள உள்ளது.

உக்ரைன் வீரர்களின் உயிரைக் காப்பாற்ற டிரம்ப் வேண்டுகோ; ஓகே சொன்ன புடின்; ஆனால் ஒருகண்டிஷன்

உக்ரைன் வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கோரிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதிலளித்தார்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இரண்டு வருடங்களில் இல்லாத அளவு உயர்வு; ஒரே வாரத்தில் $15.27 பில்லியன் அதிகரிப்பு

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கூர்மையான உயர்வாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $15.267 பில்லியன் அதிகரித்து, மார்ச் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $653.966 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

வேளாண் பட்ஜெட் தாக்கல்; 2025-26 ஆண்டிற்கு விவசாயத்திற்கு தமிழக அரசு ₹45,661 கோடி ஒதுக்கீடு

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2025-26 நிதியாண்டுக்கான மாநில விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்து, விவசாயிகளுக்கான மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களை அறிவித்தார்.

ஹமாஸ் ஆதரவு பேச்சால் விசா ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி அமெரிக்காவிலிருந்து தானாக வெளியேற்றம்

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன், மாணவர் விசா ரத்து செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார்.

நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய சினிமாவுக்குத் திரும்பும் விஜய் பட நடிகை

பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டின் நட்சத்திர நடிகையான பிரியங்கா சோப்ரா நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய சினிமாவுக்குத் திரும்புவது உறுதியாகியுள்ளது.

இன்றும் நாளையும் தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது.

21வது நாள்; தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்தில் தொடரும் மீட்பு நடவடிக்கை

தெலுங்கானாவில் பகுதியளவு இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் சிக்கிய ஏழு தொழிலாளர்களைத் தேடும் பணி 21வது நாளில் நுழைந்துள்ளது.

அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில், ​​கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

214 பாகிஸ்தான் பணயக்கைதிகளை தூக்கிலிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு; சர்வதேச சட்டத்திற்கு இணங்கி செயல்பட்டதாக அறிக்கை

பணயக்கைதிகள் பரிமாற்றம் குறித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததை காரணம் காட்டி, 214 பணயக்கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக பலூச் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அறிவித்துள்ளது.