NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சர்வதேச டி20 மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்; போட்டியை எப்படி பார்ப்பது?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச டி20 மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்; போட்டியை எப்படி பார்ப்பது?
    சர்வதேச டி20 மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்

    சர்வதேச டி20 மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்; போட்டியை எப்படி பார்ப்பது?

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 15, 2025
    03:26 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) சர்வதேச டி20 மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) 2025 இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸை எதிர்கொள்ள உள்ளது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிப்போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறும். தொடர் முழுவதும் இரு அணிகளும் அற்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தின.

    சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

    இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி, ஐந்து போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்த போதிலும், நான்காவது இடத்தைப் பிடித்தது.

    அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவையும், வெஸ்ட் இண்டீஸ் இலங்கையையும் வீழ்த்தின.

    போட்டி விபரங்கள்

    போட்டியை எவ்வாறு காண்பது?

    இறுதிப் போட்டி இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்கும், டாஸ் இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    ரசிகர்கள் கலர்ஸ் சினிப்ளெக்ஸ் மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸ் சூப்பர்ஹிட்ஸில் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.

    அதே நேரத்தில் ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைதளத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்.

    இரு அணிகளிலும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இருப்பதால், ஐஎம்எல் 2025 இறுதிப் போட்டி ஒரு சிறந்த டி20 கிரிக்கெட் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக குரூப் ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய நிலையிலும், இதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீரர்கள்

    மாஸ்டர்ஸ் அணி வீரர்கள் பட்டியல்

    இந்திய கிரிக்கெட் அணி: சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), அம்பதி ராயுடு, குர்கீரத் சிங் மான், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, யூசுப் பதான், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு மிதுன், தவால் குல்கர்னி, பவன் நேகி, ராகுல் சர்மா, ஷாபாஸ் நதீம், வினய் குமார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி: பிரையன் லாரா (கேப்டன்), கிறிஸ் கெய்ல், கிர்க் எட்வர்ட்ஸ், லென்டில் சிம்மன்ஸ், நர்சிங் தியோனரைன், ஆஷ்லி நர்ஸ், டுவைன் ஸ்மித், சாட்விக் வால்டன் (விக்கெட் கீப்பர்), தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), வில்லியம் பெர்கின்ஸ் (விக்கெட் கீப்பர்), பிடல் எட்வர்ட்ஸ், ஜெரோம் டெய்லர், ரவி ராம்பால், சுலைமான் பென், டினோ பெஸ்ட்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    இந்திய கிரிக்கெட் அணி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா
    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா

    டி20 கிரிக்கெட்

    இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணி
    மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் ஐபிஎல் 2025
    இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    ஈடன் கார்டனில் இந்தியாவிடம் தோற்றதற்கு காரணம் அதிக பனிமூட்டம்; இங்கிலாந்தின் ஹாரி புரூக் கருத்து இந்தியா vs இங்கிலாந்து

    இந்திய கிரிக்கெட் அணி

    சாம்பியன்ஸ் டிராபி 2025இல் இந்திய வீரர்களை கட்டிப்பிடிக்கக் கூடாது; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வார்னிங் சாம்பியன்ஸ் டிராபி
    சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாயில் புதிய மைதானங்கள் அமைப்பு சாம்பியன்ஸ் டிராபி
    பிசிசிஐ விதியை பின்பற்றி விராட் கோலிக்கு ஹோட்டலில் இருந்து வந்த சிறப்பு உணவு பார்சல் விராட் கோலி
    சாம்பியன்ஸ் டிராபி மைதானத்தில் இந்திய கொடி இல்லாததால் சர்ச்சை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் சாம்பியன்ஸ் டிராபி

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஃபிரான்சைஸ் லீக்கை தியாகம் செய்ய தயாராகும் ஆண்ட்ரே ரஸ்ஸல் கிரிக்கெட்
    IND vs WI 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs WI 2வது டெஸ்ட் : தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய விராட் கோலி விராட் கோலி
    INDvsWI: 1 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி டெஸ்ட் மேட்ச்

    கிரிக்கெட்

    சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்குப் பின் குரூப் பி'யின் அரையிறுதி வாய்ப்புகள் சாம்பியன்ஸ் டிராபி
    2025இல் மேலும் மூன்று இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு; எப்படி தெரியுமா? இந்தியா vs பாகிஸ்தான்
    மகளிர் ஐபிஎல் 2025: ஸ்ட்ரைக் ரேட்டில் மோசமான சாதனை ஆர்சி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஸ்மிருதி மந்தனா
    எம்எஸ் தோனிக்குப் பிறகு சிஎஸ்கேவின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? பரிசீலையில் இருக்கும் மூன்று பெயர்கள் எம்எஸ் தோனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025