43 நாட்டினருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா திட்டம் எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 43 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள், பாகிஸ்தான், வட கொரியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் திட்டத்தை விவரிக்கும் ஒரு குறிப்பாணை, நாடுகளை மூன்று பட்டியல்களாகப் பிரிக்கிறது.
இதன்படி, சிவப்புப் பட்டியலில் ஈரான், வட கொரியா மற்றும் வெனிசுலா போன்ற 11 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிடமிருந்து முழு பயண தடையை எதிர்கொள்ளக் கூடும்.
பட்டியல்
இதர பட்டியல்
அடுத்து உள்ள ஆரஞ்சுப் பட்டியலில் பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் மியான்மர் உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன.
அவை கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவையாக இருக்கும். ஆனால் முழுமையான தடை விதிக்கப்படவில்லை.
இதற்கிடையில், மஞ்சள் பட்டியலில்' கேமரூன், ஜிம்பாப்வே மற்றும் கம்போடியா போன்ற 22 நாடுகள் உள்ளன.
அவை அமெரிக்கத் தேவைகளுக்கு இணங்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் அல்லது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வகைகளுக்கு மாற்றப்படும் அபாயம் உள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் இன்னும் மதிப்பாய்வில் இருப்பதாகவும், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட டிரம்ப் நிர்வாகத்தின் இறுதி ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி, பட்டியல்களை செயல்படுத்துவதற்கு முன்பு இன்னும் மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.