ஹோலி வண்ணப்பொடிகளால் கார்களில் படிந்துள்ள கறைகளை அகற்றுவதற்கான டிப்ஸ்
செய்தி முன்னோட்டம்
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, பெரும்பாலும் வாகனங்களில் கடினமான கறைகளை விட்டுச்செல்கிறது.
இவை உடனடியாக கவனிக்கப்படாவிட்டால், அவற்றை அகற்றுவது கடினமாக இருக்கும். உங்கள் காரின் பளபளப்பைப் பராமரிக்கவும், அதன் பெயிண்டைப் பாதுகாக்கவும், சரியான சுத்தம் செய்யும் வழக்கத்தைப் பின்பற்றுவது அவசியம்.
இதன் முதல் படி, அழுக்கு மற்றும் வண்ணப் புள்ளிகளை அகற்ற குழாய் அல்லது பிரஷர் வாஷரைப் பயன்படுத்தி காரை நன்கு கழுவ வேண்டும்.
கழுவுவதற்கு முன் ஸ்க்ரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது காரின் மேற்பரப்பில் கீறல்களுக்கு வழிவகுக்கும்.
பெயிண்டைப் பாதுகாக்க, சேதத்தை ஏற்படுத்தக்கூடிய லிக்விட்களை தவித்துவிட்டு, pH-சமநிலை கார் ஷாம்பூவைப் பயன்படுத்தவும். ஷாம்பூவை மென்மையான மைக்ரோஃபைபர் துணி அல்லது கடற்பாசி மூலம் தேய்க்கவும்.
பெயிண்ட்
பெயிண்ட்களை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
கடினமான கறைகளுக்கு, லேசான வினிகர் கரைசலைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இது பெயிண்டிற்கு தீங்கு விளைவிக்காமல் கறைகளை திறம்பட கரைக்கிறது.
பின்னர், சுத்தமான மைக்ரோஃபைபர் துணியால் மெதுவாக துடைக்கவும். ஹோலி வண்ணங்கள் காரின் உட்புறத்திலும் ஊடுருவி, இருக்கைகளையும் கறைபடுத்தலாம்.
அங்கு, உலர்ந்த வண்ண பொடிகளை அகற்ற ஒரு வெற்றிட சுத்திகரிப்பான் உதவும், அதே நேரத்தில் ஈரமான கறைகளுக்கு லேசான சோப்பு கரைசலை பயன்படுத்தலாம். டேஷ்போர்டு மற்றும் கதவுகளை ஈரமான மைக்ரோஃபைபர் துணியால் துடைத்து, கறைகளை அகற்ற வேண்டும்.
கூடுதலாக, கண்ணாடி கிளீனர் அல்லது வினிகர்-தண்ணீர் கலவையைப் பயன்படுத்தி கண்ணாடிகளை சுத்தம் செய்வது தெளிவான பார்வையை உறுதி செய்கிறது.