NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 16 ஆண்டுகால சூப்பர் ஓவர் வரலாற்றில் முதல்முறை; மோசமான சாதனை படைத்தது பஹ்ரைன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    16 ஆண்டுகால சூப்பர் ஓவர் வரலாற்றில் முதல்முறை; மோசமான சாதனை படைத்தது பஹ்ரைன்
    பஹ்ரைன் மோசமான சாதனை

    16 ஆண்டுகால சூப்பர் ஓவர் வரலாற்றில் முதல்முறை; மோசமான சாதனை படைத்தது பஹ்ரைன்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 15, 2025
    05:27 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் பூஜ்ஜிய ரன்கள் எடுத்த முதல் அணி என்ற துரதிர்ஷ்டவசமான சாதனையை பஹ்ரைன் படைத்துள்ளது.

    மலேசிய டி20ஐ முத்தரப்பு தொடரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பாயுமாஸ் கிரிக்கெட் ஓவலில் நடந்த ஹாங்காங்கிற்கு எதிரான மோதலின் போது இந்த மோசமான சாதனை படைக்கப்பட்டது.

    பஹ்ரைன் ஹாங்காங்கின் 129/7 என்ற மொத்த இலக்கை துரத்தி விளையாடும்போது கடைசி இரண்டு பந்தில் 7 தேவைப்பட்டது.

    அப்போது பஹ்ரைனின் கேப்டன் அஹ்மர் பின் நாசிர் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்து, கடைசி பந்தில் அவுட்டானார். இதனால் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது.

    சூப்பர் ஓவர்

    சூப்பர் ஓவரில் சொதப்பிய பஹ்ரைன்

    சூப்பர் ஓவரில் ஐசிசியின் டி20ஐ விதிப்படி முதலில் பேட்டிங் செய்த பஹ்ரைன், ஹாங்காங்கின் எஹ்சான் கானை எதிர்த்துப் போராடியது.

    இரண்டாவது பந்தில் பின் நாசிர் ஆட்டமிழந்தார், அதைத் தொடர்ந்து மூன்றாவது பந்தில் சோஹைல் அகமது அவுட்டானதால், பஹ்ரைன் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தது.

    டி20ஐ விதிகளின்படி, இரண்டு விக்கெட்டுகளை இழந்தால் பேட்டிங் அணியின் சூப்பர் ஓவர் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஹாங்காங் அணி தனது சூப்பர் ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது.

    சூப்பர் ஓவர் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 16 ஆண்டுகளில், ஒரு அணி சூப்பர் ஓவரில் ரன் அடிக்கத் தவறியது இதுவே முதல் முறையாகும்.

    இது பஹ்ரைனின் துரதிர்ஷ்டவசமான சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாற்றியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்
    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்

    டி20 கிரிக்கெட்

    மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் ஐபிஎல் 2025
    இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    ஈடன் கார்டனில் இந்தியாவிடம் தோற்றதற்கு காரணம் அதிக பனிமூட்டம்; இங்கிலாந்தின் ஹாரி புரூக் கருத்து இந்தியா vs இங்கிலாந்து
    பொதுப் போக்குவரத்தில் இலவச பயணம்; சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு இந்தியா vs இங்கிலாந்து

    கிரிக்கெட்

    2025இல் மேலும் மூன்று இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு; எப்படி தெரியுமா? இந்தியா vs பாகிஸ்தான்
    மகளிர் ஐபிஎல் 2025: ஸ்ட்ரைக் ரேட்டில் மோசமான சாதனை ஆர்சி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஸ்மிருதி மந்தனா
    எம்எஸ் தோனிக்குப் பிறகு சிஎஸ்கேவின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? பரிசீலையில் இருக்கும் மூன்று பெயர்கள் எம்எஸ் தோனி
    வித்தியாசமான உணர்வு; ஐபிஎல் 2025இல் சிஎஸ்கேவுக்கு திரும்புவது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி அஸ்வின் ரவிச்சந்திரன்

    கிரிக்கெட் செய்திகள்

    CT 2025: ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு தகுதி பெறப்போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி
    ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரே சீசனில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷ் துபே சாதனை ரஞ்சி கோப்பை
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    CT 2025: டாஸ் வென்றது நியூசிலாந்து; இந்திய அணி முதலில் பேட்டிங் இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025