
சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை
செய்தி முன்னோட்டம்
போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முறையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ பதிவில், இந்த அறிவிப்பு முற்றிலும் ஜோடிக்கப்பட்டதாகவும், ஆணையத்தால் வெளியிடப்படவில்லை என்றும் யுஜிசி தெளிவுபடுத்தியுள்ளது.
பார்ப்பதற்கு சரியாக இருப்பதாக தோன்றும்படி உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையில், தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி மாணவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
எனினும், யுசிஜி அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனக் கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது மற்றும் துல்லியமான புதுப்பிப்புகளுக்கு அதன் அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டங்கள் மற்றும் தவறான தகவல்கள் அதிகரித்ததை அடுத்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தால் தேர்வு ஒத்திவைப்புகள் போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளூர் அளவில் மேற்கொள்ளப்பட்டாலும், நாடு தழுவிய ரத்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பத்திரிகை தகவல் பணியகம் (PIB) ஆன்லைனில் பரவும் தவறான கூற்றுக்களை தீவிரமாக மறுத்து வருகிறது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்று யுஜிசி மீண்டும் வலியுறுத்தியது.
மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்கள் தங்கள் திட்டமிடப்பட்ட தேர்வுகளுக்குத் தொடர்ந்து தயாராகி, யுஜிசி அல்லது அந்தந்த கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.