தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது; 97.54% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், 97.54% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே முதல் இடத்தைபெற்றுள்ளது திரூப்பூர் மாவட்டம். அடுத்ததாக சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), அரியலூர் (97.25%), கோவை (96.97%) ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அடிப்படையிலும் திருப்பூர் (95.75%) முதல் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, அரியலூர் (95.64%), ஈரோடு (95.63%), சிவகங்கை (95.56%), தூத்துக்குடி (94.13%) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை தேர்ச்சி விகிதம் 94.56% என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 0.53% அதிகமாகும். அதே நேரத்தில் வழக்கம் போல, இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
#BREAKING | 12ம் வகுப்பு பொதுத் தேர்வு: திருப்பூர் மாவட்டம் முதலிடம்!#SunNews | #12thExamResult | #ExamResults pic.twitter.com/8A4tTWC4Rf— Sun News (@sunnewstamil) May 6, 2024
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
#BREAKING | +2 தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை மாணவிகள் - 96.44% , மாணவர்கள் - 92.37%#SunNews | #12thExamResult | #ExamResults pic.twitter.com/8bm6MjrR1k— Sun News (@sunnewstamil) May 6, 2024
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: அறிவியல் பாடப் பிரிவில் அதிக தேர்ச்சி!#SunNews | #12thExamResult | #ExamResults pic.twitter.com/9rKJNtqIDt— Sun News (@sunnewstamil) May 6, 2024
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழ் பாடத்தில் மட்டும் 35 பேர் 100% மதிப்பெண்கள்!#SunNews | #12thExamResult | #ExamResults pic.twitter.com/pOzi4vaviK— Sun News (@sunnewstamil) May 6, 2024
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: ஆண்களை விட பெண்களே அதிகளவில் தேர்ச்சி!#SunNews | #12thExamResult | #ExamResults pic.twitter.com/hJ698G7mmP— Sun News (@sunnewstamil) May 6, 2024
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
#BREAKING | தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி பெற்று அசத்தல்!#SunNews | #12thExamResults | #ExamResults pic.twitter.com/SChQIQL68I— Sun News (@sunnewstamil) May 6, 2024