
கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC
செய்தி முன்னோட்டம்
சென்றவாரம் நடைபெற்ற யுஜிசி ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வரும் செப்.30க்குள் கல்லூரியிலிருந்து விலகும் மாணவர்கள் அனைவருக்கும் முழு கட்டணத்தையும் திருப்பி தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
யுஜிசியின் நிர்வாகத்தின் கீழ் வரும் அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UGC-இன் அறிக்கைப்படி, கட்டணம் திரும்பப்பெறும் சதவீதம்:
100%: சேர்க்கைக்கான கடைசி தேதிக்கு, 15 நாட்களுக்கு முன்னதாக மாணவர் விலகினால்.
90%: சேர்க்கைக்கான கடைசி தேதிக்கு, 15 நாட்களுக்குள் மாணவர் விலகினால்.
80%: சேர்க்கைக்கான கடைசி தேதிக்கு பின்னர், 15 நாட்களுக்கும் குறைவாக விலகினால்.
50%: சேர்க்கைக்கான கடைசி தேதிக்கு பின்னர், 30 நாட்கள் குறைவாகவும், 15 நாட்களுக்கு அதிகமாகவும் இருந்தால்.
ட்விட்டர் அஞ்சல்
கட்டணம் திரும்பப்பெறும் சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது
#JUSTIN | "கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்"
— Thanthi TV (@ThanthiTV) July 4, 2023
அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு#UGC #TNCollege pic.twitter.com/w9tJtCTs9b