Page Loader
இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அதிர்ச்சி தகவல்
இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அதிர்ச்சி தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2023
09:50 am

செய்தி முன்னோட்டம்

இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்கள் கிட்டத்தட்ட 20 வரை இயங்கி வருவதாக, பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. போலி பல்கலைக்கழகங்களாக பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனங்கள், எந்த டிகிரியையும் (பட்டம்) வழங்க அனுமதி இல்லை என்றும் அந்த அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. மீறி வழங்கப்படும் டிகிரிக்கள் செல்லுபடியாகாது எனவும் கூறப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட 20 போலி பல்கலைக்கழங்களில், 8 பல்கலைக்கழங்கள், டெல்லியில் செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அவை, அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், வர்த்தக பல்கலைக்கழகம் லிமிடெட், ஐ.நா. பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏ.டி.ஆர். மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா(ஆன்மிக பல்கலைக்கழகம்) ஆகியவை ஆகும்.

ட்விட்டர் அஞ்சல்

20 போலி பல்கலைக்கழகங்கள்