
பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அதனைதொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார்.
இதனையடுத்து மாணவிகள் குறிப்பிட்ட 4 பேர் மீது எழுத்துபூர்வமாக புகார் அளித்த நிலையில், பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மற்ற 3 பேர் தற்காலிக ஆசிரியர்கள் என்பதால் பணி நீக்கம் செய்வதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கல்லூரி இன்று(ஏப்ரல்.,5)மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மாணவிகளும் இன்று முதல் கல்லூரிக்கு திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு
#NewsUpdate | சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன; கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது!#SunNews | #Chennai | #KalakShetraFoundation
— Sun News (@sunnewstamil) April 5, 2023