
சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ
செய்தி முன்னோட்டம்
சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் எடுத்துக்கொள்ளும் மாதாந்திர பாஸ் முறையின் போலவே சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் எடுத்துக்கொள்ளும் முறை விரைவில் அறிமுகமாகவுள்ளது.
மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் எடுத்து வருகிறது.
அதில் ஒன்று தான் இந்த மாதாந்திர பாஸ் திட்டமாகும். மாதம் 2,500 ரூபாய் கட்டினால் ஒரு அட்டை தரப்படும்.
இதனை வைத்து ஒரு மாதம் எங்கு வேண்டுமானாலும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம்.
தொடர்ந்து குறிப்பிட்ட ஸ்டேஷன் டூ ஸ்டேஷன் மாதாமாதம் செல்லவும் சலுகைகள் வழங்கப்படவுள்ளது.
இந்த புதிய முறையானது வெகு விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளநிலையில், முதல்கட்டமாக அரசு கல்லூரி மாணவர்களுக்கு இந்த திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்!#SunNews | #MetroRailPass | @cmrlofficial pic.twitter.com/TLWeqGKbgr
— Sun News (@sunnewstamil) May 12, 2023