வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

2024-25 ஆம் ஆண்டிற்கான பிஎஃப் வைப்புத்தொகைக்கான EPFO வட்டி விகிதம் 8.25% 

2024-25 நிதியாண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தக்க வைத்துக் கொண்டுள்ளது.

28 Feb 2025

ஜிடிபி

வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்; மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.2% அதிகரிப்பு

தேசிய புள்ளிவிவர அலுவலகம், புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.2% வளர்ச்சி அடைந்துள்ளது.

சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிவு; நிஃப்டியும் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி; 

இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை கடுமையான சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது மற்றும் நிஃப்டி 1% க்கும் அதிகமாக சரிந்தது.

28 Feb 2025

யுபிஐ

யுபிஐ கட்டண முறைக்கு பெருகும் வரவேற்பு; 5,000 இருக்கைகளுடன் மும்பையில் உலகளாவிய தலைமையகத்தை அமைக்கிறது என்பிசிஐ

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ), அதன் சர்வதேச விரிவாக்க முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், மும்பையில் ஒரு உலகளாவிய தலைமையகம் மற்றும் 5,000 இருக்கைகள் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

28 Feb 2025

வணிகம்

UPI முதல் LPG விலை மாற்றம் வரை: மார்ச் 1 முதல் புதிய விதிகள் அமல்

நாளை, மார்ச் 1, 2025 முதல் நாட்டில் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் நடைபெறவுள்ளன.

28 Feb 2025

செபி

புதிய செபி தலைவராக நிதியமைச்சக மூத்த ஐஏஐஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமனம்

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக 3 ஆண்டுகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தை பிப்ரவரி மாத கடைசி நாளில் கடும் வீழ்ச்சியுடன் தொடக்கம்

இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) அன்று ஆரம்ப பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 985.54 புள்ளிகள் (1.32%) சரிந்து 73,658.45 ஆகவும், நிஃப்டி50 295.95 புள்ளிகள் (1.31%) குறைந்து 22,249.10 ஆகவும் சரிந்ததால் கடுமையான சரிவைச் சந்தித்தன.

27 Feb 2025

அமேசான்

டிரேட்மார்க் மீறலுக்காக அமேசான் நிறுவனத்திற்கு ₹339.25 கோடி அபராதம்; டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டிரேட்மார்க் மீறலுக்காக ஆடம்பர ஆடை பிராண்டான பெவர்லி ஹில்ஸ் போலோ கிளப்புக்கு ₹339.25 கோடி இழப்பீடு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் அமேசானின் இந்திய பிரிவுக்கு உத்தரவிட்டது.

இந்தியாவில் அனைவருக்கும் ஓய்வூதியம்; யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசனை

அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு விருப்பங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) செயல்பட்டு வருகிறது.

ஏஐ பயன்பாடு அதிகரிப்பு; நான்காம் காலாண்டில் 78% வருவாய் அதிகரிப்பைப் பெற்ற என்விடியா நிறுவனம்

முன்னணி ஏஐ சிப் தயாரிக்கும் நிறுவனமான என்விடியா (NVIDIA), ஜனவரி 26, 2025 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 78% வருவாய் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு; 5-8% அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கான சமீபத்திய சம்பள திருத்தங்களைத் தொடங்கியுள்ளது.

25 Feb 2025

ஏர்டெல்

டாடா ப்ளே, ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்

டாடா ப்ளே மற்றும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆகியவை விரைவில் இணையவிருப்பதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூ இந்தியா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் ₹25,000 வரை எடுத்துக் கொள்ள ஆர்பிஐ அனுமதி

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகையாளர்கள் பிப்ரவரி 27 முதல் ₹25,000 வரை பணம் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதித்துள்ளது.

இந்தியா - பிரிட்டன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை; வர்த்தகத்தை மூன்று மடங்காக உயர்த்த திட்டம்

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குகின்றன.

அமெரிக்க நிறுவனம் AMD உடன் இணைந்து இந்தியாவில் சர்வர்களை தயாரிக்க பாரத் ஃபோர்ஜ் திட்டம்

பாரத் ஃபோர்ஜின் துணை நிறுவனமான கல்யாணி பவர்டிரெய்ன், அமெரிக்காவின் அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் (AMD) உடனான ஒரு மூலோபாய ஒத்துழைப்பு மூலம் இந்திய சர்வர் சந்தையில் நுழைய உள்ளது.

24 Feb 2025

நிஃப்டி

28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் சரிவை சந்திக்கும் நிலையில் நிஃப்டி50 

இந்தியாவின் முக்கிய குறியீட்டெண்ணான நிஃப்டி50 , கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் அதன் மிக நீண்ட தொடர் சரிவின் விளிம்பில் உள்ளது.

24 Feb 2025

முதலீடு

இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே திட்டம்

சுவிட்சர்லாந்து மற்றும் அதன் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் (EFTA) கூட்டாளிகளான ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டீன் மற்றும் நார்வே ஆகியவை இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீட்டை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

23 Feb 2025

இந்தியா

இந்தியாவிற்கு USAID 750 மில்லியன் டாலர் நிதியுதவி; மத்திய அரசு அறிக்கையில் தகவல்

இந்திய நிதியமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) 750 மில்லியன் டாலர் (தோராயமாக ₹6,000 கோடி) மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு நிதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 Feb 2025

மெட்டா

பெங்களூரில் புதிய அலுலகம் அமைக்கிறது மெட்டா; ஏஐ பொறியாளர்களை ஆட்தேர்வு செய்ய திட்டம்

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, பெங்களூரில் ஒரு புதிய அலுவலகத்தை அமைத்து இந்தியாவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்த உள்ளது.

இந்தியா - பிரிட்டன் இடையே ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவும் பிரிட்டனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளன.

21 Feb 2025

வணிகம்

விலைகளைக் கட்டுப்படுத்த கோதுமை இருப்பு வரம்புகளை குறைத்தது மத்திய அரசு

கோதுமையின் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான மீது புதிய இருப்பு வரம்புகளை விதித்துள்ளது மத்திய அரசு.

இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலம் நீட்டிப்பு

இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் கவலைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கைகள் குறித்த வளர்ந்து வரும் அச்சங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பைத் தேடியதால் இன்று (பிப்ரவரி 20) தங்கத்தின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளன.

கூகுள் பே மூலம் பில் செலுத்துபவர்களுக்கு சேவைக் கட்டணம் விதிப்பு; கிரெடிட்/டெபிட் கார்டு பயனர்களுக்கு மட்டும்

இந்தியாவில் யுபிஐ சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள கூகுள் பே, பில் செலுத்துவதற்கு சேவைக் கட்டணத்தை விதிக்கத் தொடங்கியுள்ளது.

19 Feb 2025

கூகுள்

'அனந்தா': வைரலாகும் கூகிளின் புதிய பெங்களூரு ஆஃபீஸ், இந்தியாவின் மிகப்பெரிய கிளை

பெங்களூருவில் 'அனந்தா' என்ற புதிய வளாகத்தைத் திறப்பதாக கூகிள் புதன்கிழமை அறிவித்தது.

19 Feb 2025

வணிகம்

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பட்டியலிடப்படாத நிறுவனங்களில் ஜோஹோ, ஜெரோதா: அறிக்கை

2024 பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 அறிக்கையின்படி, ஜோஹோ கார்ப்பரேஷன் மற்றும் ஜெரோதா ஆகியவை இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பட்டியலிடப்படாத இரண்டு நிறுவனங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

ஆட்டோ, மருந்து மற்றும் செமிகண்டக்டர் இறக்குமதிகளுக்கு 25% வரிகளை விதித்த டிரம்ப்

இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் மீது 25% வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

19 Feb 2025

டெஸ்லா

இந்தியாவில் நுழைய தீவிரமாக களமிறங்கும் டெஸ்லா; ஆலையை அமைக்க நிலம் தேடுகிறது எனத்தகவல்

இந்தியாவில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலையை அமைக்க டெஸ்லா நிறுவனம் நிலத்தைத் தேடுகிறது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

தொழில்முனைவோர்களுக்கு 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசு சமீபத்தில் முதல் முறையாக தொழில்முனைவோருக்காக ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியது.

18 Feb 2025

டிசிஎஸ்

விசா மோசடி செய்ததாக டிசிஎஸ் மீது முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு: என்ன நடந்தது

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), விசா மோசடி மற்றும் அமெரிக்க தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எச்-1பி விசா விதிமுறைகளில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.

18 Feb 2025

டெஸ்லா

ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கிய டெஸ்லா; இந்தியாவில் நுழையும் திட்டம் உறுதி?

ஒரு பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படும் நடவடிக்கையில், டெஸ்லா இந்தியாவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

17 Feb 2025

அதானி

இந்தியா முழுவதும் பள்ளிகளை அமைக்க ₹2,000 கோடி முதலீடு செய்கிறது அதானி குழுமம்

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 20 பள்ளிகளை அமைப்பதற்காக அதானி குழுமம் ₹2,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் புதிய பார்ட்னெர்ஷிப் மூலம் இப்போது ஆஸ்திரேலியாவிற்கு எளிதாக பயணிக்கலாம்

இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இணைப்பை அதிகரிக்கவும் பயணத்தை எளிதாக்கவும், ஏர் இந்தியா மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

வைப்புத்தொகைக்கான காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை

மத்திய அரசு வங்கி வைப்புத் தொகைக்கான தற்போதைய ₹5 லட்சம் காப்பீட்டு வரம்பை உயர்த்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று (பிப்ரவரி 17) உறுதிப்படுத்தினார்.

பிரிட்டிஷ் காப்பீட்டு நிறுவனத்தின் இந்தியா பிரிவிற்கு 7.5 மில்லியன் டாலர் அபராதம்; பின்னணி என்ன?

பிரிட்டிஷ் காப்பீட்டு நிறுவனமான அவிவாவின் இந்திய துணை நிறுவனத்திற்கு உள்ளூர் அதிகாரிகளால் $7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

15 Feb 2025

ஆர்பிஐ

RBIயால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நியூ இந்தியா கூட்டுறவு வங்கி ஜிஎம் ₹122 கோடி மோசடி வழக்கில் கைது

மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) ₹122 கோடி மோசடி வழக்கு தொடர்பாக நியூ இந்தியா கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை சனிக்கிழமை (பிப்ரவரி 15) கைது செய்தது.

ஏப்ரல் 1 முதல் அமலாகிறது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்; அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

அரசு ஊழியர்களுக்கு அதிக நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில், தேசிய ஓய்வூதிய முறைக்கு (என்பிஎஸ்) மாற்றாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) மத்திய அரசு தொடங்கியுள்ளது.

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்புகள்

அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதிக்க தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) அறிவித்தார்.

2007க்கு பிறகு முதல்முறையாக நடப்பு நிதியாண்டில் மூன்றாம் காலாண்டில் லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ₹262 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

நவி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார் சச்சின் பன்சால்

நவி நிறுவனர் சச்சின் பன்சால் தனது தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.