
UPI முதல் LPG விலை மாற்றம் வரை: மார்ச் 1 முதல் புதிய விதிகள் அமல்
செய்தி முன்னோட்டம்
நாளை, மார்ச் 1, 2025 முதல் நாட்டில் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் நடைபெறவுள்ளன.
எல்பிஜி விலைகள், காப்பீட்டு பிரீமியம் கட்டணம் செலுத்தும் முறைகள் உள்ளிட்ட விதிகள் இதில் அடங்கும்.
மார்ச் 1 முதல் என்ன மாற்றங்கள் நடப்பதை மற்றும் அதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இது உங்கள் நிதி சார்ந்த முடிவுகளை திட்டமிட உதவும்.
கேஸ் சிலிண்டர்
LPG சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம்
LPG - எரிவாயு சிலிண்டர் விலைகள் மார்ச் 1 முதல் மாற்றப்படலாம்.
கடந்த மாதம், 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் குறைப்பு ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது விமானம் மற்றும் ஜெட் எரிபொருள் அல்லது ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) விலைகள் மாற்றத்திற்கு உள்ளாகலாம்.
இந்த எரிபொருளின் விலை எண்ணெய் விநியோக நிறுவனங்களால் மாதந்தோறும் திருத்தப்படுகின்றன.
ஒரு வேலை இந்த விலைகளில் மாற்றங்கள் ஏற்படின், அது விமான டிக்கெட் விலைகளையும் பாதிக்கக்கூடும்.
அதனால் நுகர்வோர் வணிகம் பாதிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
PF நிதி
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Provident Fund), உலகளாவிய கணக்கு எண்களை செயல்படுத்துவதற்கும், வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கும் மார்ச் 15, 2025 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி சலுகைகளை தடையின்றி பெறவும், ஊழியர் ஆயுள் காப்பீட்டு திட்டம் பெறவும் இந்த செயல்முறை அவசியம்.
இந்த இணைப்பை இன்னும் முடிக்காதவர்கள், காலக்கெடுவிற்கு முன்னதாக இதை நிறைவேற்ற வேண்டும்.
பீமா-ஏஎஸ்பி
யுபிஐ மூலம் காப்பீடு பணத்தை செலுத்தும் வசதி
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) பீமா-ஏஎஸ்பி என்ற புதிய பிரீமியம் கட்டண வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
இந்த புதிய அம்சம், பாலிசிதாரர்களை UPI மூலம் காப்பீட்டு பிரீமியங்களை செலுத்த அனுமதிக்கின்றது.
இது இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பரிவர்த்தனைகளை விரைவாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் ஆக்குகிறது.
மியூச்சுவல் பண்ட்
மியூச்சுவல் பண்ட் நியமன விதிகளில் மாற்றம்
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மியூச்சுவல் பண்ட் நியமன விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.
இதன் மூலம், முதலீட்டாளர்கள் மார்ச் 1 முதல் தங்கள் டீமேட் கணக்குகள் அல்லது மியூச்சுவல் பண்ட் ஃபோலியோக்களில் 10 பேரை பரிந்துரைக்க முடியும்.
கூடுதலாக, மார்ச் 2025 இல் வங்கிகள் 14 நாட்கள் மூடப்பட உள்ளன.
எனவே நிதி பரிவர்த்தனைகளுக்காக வங்கிக்குச் செல்லும் முன் வாடிக்கையாளர்கள் விடுமுறை பட்டியலை சரிபார்க்க வேண்டும்.
வங்கி விடுமுறை
வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை
வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
சில மாநிலத்திற்கான விழாக்களுக்கு அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளும் மார்ச் மாதத்தில் தான் வருகிறது.
இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ சேவை தொடர்ந்து வழங்கப்படும்