உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
08 Dec 2024
சிரியாகிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் எதிரொலி; தலைநகரை விட்டு தலைமறைவானார் சிரிய அதிபர்
சிரிய அதிபர் பஷார் அல்-அசாத், தலைநகருக்குள் நுழைவதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்ததையடுத்து, டமாஸ்கஸில் இருந்து தெரியாத இடத்திற்கு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
07 Dec 2024
ஆப்பிரிக்காஆப்பிரிக்காவில் பரவும் டிசீஸ் எக்ஸ் மர்ம நோயால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) இப்போது டிசீஸ் எக்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான நோய் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளிடையே எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது.
07 Dec 2024
தென் கொரியாராணுவ ஆட்சியை அமல்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல்
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், ராணுவச் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சிக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
06 Dec 2024
எலான் மஸ்க்டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்திற்காக $250 மில்லியனுக்கும் மேல் எலான் மஸ்க் செலவழிப்பு
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் வெள்ளை மாளிகைக்கான வெற்றிகரமான முயற்சியின் முக்கிய நிதி ஆதரவாளராக உருவெடுத்துள்ளார்.
06 Dec 2024
காலநிலை மாற்றம்2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவால் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் இழப்பு
இயற்கை பேரழிவுகள் 2024 இல் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது.
06 Dec 2024
கிறிஸ்துமஸ்கிறிஸ்துமஸ் தாத்தாவின் உண்மை முகத்தை நவீன தடயவியல் தொழில்நுட்பம் மூலம் விஞ்ஞானிகள் உருவாக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில், அதில் முக்கிய அங்கமான கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா கிளாஸின் பின்னணியில் உள்ள வரலாற்று நபரான மைராவின் புனித நிக்கோலஸின் முகத்தை விஞ்ஞானிகள் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
05 Dec 2024
விளாடிமிர் புடின்இந்தியாவின் "Make in India" திட்டத்தினை பாராட்டிய ரஷ்ய அதிபர் புடின்
இந்தியாவில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட "மேக் இன் இந்தியா" திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார்.
05 Dec 2024
இந்தியர்கள்அமெரிக்கா-கனடா எல்லையில் 40000க்கும் மேற்பட்ட இந்திய குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாகச் சென்றதாக பிடிபட்டுள்ளனர்
அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு (USCBP) கனடா வழியாக இந்திய நாட்டினரின் சட்டவிரோத குடியேற்றத்தில் கூர்மையான அதிகரிப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
05 Dec 2024
அமெரிக்காஅமெரிக்காவின் பிரபல யுனைடெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டு கொலை
யுனைடெட் ஹெல்த்கேர் என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு நிறுவனமாகும், இது வேறு எந்த நாட்டையும் விட சுகாதாரப் பாதுகாப்புக்காக அதிக பணம் செலுத்தும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நன்மைகளை வழங்குகிறது.
05 Dec 2024
பிரான்ஸ்பிரான்ஸில் அரசியல் நெருக்கடி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் பதவி பறிப்பு
பிரான்சில் எதிர்க்கட்சியினர் இன்று ஆளும் அரசாங்கத்தை வீழ்த்தி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.
04 Dec 2024
ஆப்கானிஸ்தான்மருத்துவச்சி மற்றும் நர்சிங் படிப்புகளை படிக்க ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தடை விதித்த தலிபான்
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மருத்துவச்சி மற்றும் நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு தலிபான்களின் உச்ச தலைவரின் ஆணையைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது என்று AFP தெரிவித்துள்ளது.
04 Dec 2024
தென் கொரியாதென் கொரியாவை உலுக்கிய 12 மணி நேரம்: ராணுவ ஆட்சி திணிக்கப்பட்டு மீண்டும் ரத்து!
நேற்று இரவு யாரும் எதிர்பார்க்காதிருந்த நேரத்தில், தென் கொரியா ஒரு வியத்தகு அரசியல் எழுச்சியைக் கண்டது.
03 Dec 2024
பங்களாதேஷ்வங்கதேசம்: ISKCON துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் அடுத்த மாதம் வழக்கு ஒத்திவைப்பு
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ISKCON கோவில் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் எந்த வழக்கறிஞர்களும் இன்று ஆஜராகாததையடுத்து அவரது வழக்கு விசாரணை ஜனவரி 2ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
03 Dec 2024
டொனால்ட் டிரம்ப்"மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகிவிடும்": ஹமாஸ் அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்னதாக காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகம்" போல நிலைமை மோசமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
02 Dec 2024
அமெரிக்காபைடன் முதல் கிளின்டன் வரை: குடும்ப உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பளித்த அமெரிக்க ஜனாதிபதிகள்
பதவியில் இருந்த கடைசி நாட்களில், ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனை மன்னித்துள்ளார். ஃபெடரல் துப்பாக்கிகள் மற்றும் வரி குற்றங்களுக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹண்டர் தண்டிக்கப்பட்டார்.
02 Dec 2024
பங்களாதேஷ்வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணி; மதம் காரணமா?
மேற்கு வங்காளத்தின் பெல்கோரியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சயன் கோஷ், வங்கதேசத்தின் டாக்காவில் தாக்கப்பட்டதாக நியூஸ் 18 இன் அறிக்கை கூறுகிறது.
02 Dec 2024
குவைத்'இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு உரிமை இல்லை': குவைத்தில் சிக்கி தவித்த இந்திய பயணிகள்
மும்பையில் இருந்து மான்செஸ்டர் செல்லும் கல்ஃப் ஏர் விமானத்தில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் என்ஜின் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து, அதில் பயணம் செய்த இந்திய பயணிகள் திகிலூட்டும் அனுபவத்தை அனுபவித்தனர்.
02 Dec 2024
ஜோ பைடன்சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட வழக்குகளில் மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற தனது மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மன்னிப்பு வழங்கியுள்ளார்.
01 Dec 2024
டொனால்ட் டிரம்ப்பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி; அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை அனுப்பியுள்ளார்.
01 Dec 2024
அமெரிக்காஅமெரிக்காவில் எஃப்.பி.ஐ இயக்குநராக இந்திய வம்சாவளி காஷ் படேலுக்கு பொறுப்பு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் உள்நாட்டு விசாரணை அமைப்பான ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் (எஃப்பிஐ) அடுத்த இயக்குநராக பணியாற்றுவதற்காக, இந்திய அமெரிக்கரான காஷ் படேலை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
30 Nov 2024
சிங்கப்பூர்மனைவியை நம்பினோர் கைவிடப்படார்; தங்கம் நகை வாங்கிய இந்திய வம்சாவளிக்கு சிங்கப்பூரில் அடித்தது ஜாக்பாட்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திட்டப் பொறியாளர் பாலசுப்ரமணியன் சிதம்பரம், சிங்கப்பூரின் முஸ்தபா ஜூவல்லரி நடத்திய அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் 1 மில்லியன் டாலர் (₹8 கோடிக்கும் மேல்) பெரும் பரிசை வென்று ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.
30 Nov 2024
ஆப்பிரிக்காநைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனத் தகவல்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் பாயும் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் இறந்தனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) உறுதிப்படுத்தினர்.
29 Nov 2024
பங்களாதேஷ்17 ISKCON-தொடர்புடைய நபர்களின் வங்கிக் கணக்குகளை பங்களாதேஷ் முடக்கியுள்ளது
பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு (BFIU), ISKCON உடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகளை 30 நாட்களுக்கு முடக்கியுள்ளது.
29 Nov 2024
விளாடிமிர் புடின்தலைமறைவு வாழ்க்கை வாழும் உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா அதிபர் புடினின் வாரிசுகள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய மகள் என நம்பப்படும் 21 வயதான எலிசவெட்டா கிரிவோனோகிக்(Elizaveta Krivonogikh), உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து பாரிஸில் போலி அடையாளத்துடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
28 Nov 2024
ஷேக் ஹசீனா'பயங்கரவாதத்திற்கு எதிராக நில்லுங்கள்': இந்து துறவி கைது செய்யப்பட்டதை ஷேக் ஹசீனா கடுமையாக சாடியுள்ளார்
இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
27 Nov 2024
மலேசியாஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர், 5 பில்லியன் டாலர் சொத்து..இத்தனையும் விட்டு துறவறம் மேற்கொண்ட வாரிசு! யார் அவர்?
மலேசிய தொலைத்தொடர்பு கிங் என அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணனின் ஒரே ஆண் வாரிசான வென் அஜான் சிரிபான்யோ, தனது தந்தையின் கோடிக்கணக்கான சொத்தை வேண்டாம் எனக்கூறி, 18 வயதில் துறவறத்தை மேற்கொள்ளவுள்ளார்.
27 Nov 2024
இஸ்ரேல்இன்று முதல் அமலுக்கு வருகிறது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!
செவ்வாயன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
26 Nov 2024
எய்ட்ஸ்வேகமாக குறைந்துவரும் பாதிப்புகள்; எச்ஐவியை எதிர்கொள்வதில் உலகளாவிய முன்னேற்றம்
எச்ஐவிக்கு எதிரான உலகளாவிய போராட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, புதிய தொற்றுகள் மற்றும் இறப்புகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன.
26 Nov 2024
டொனால்ட் டிரம்ப்ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சீனா, கனடா, மெக்சிகோவுக்கு கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், செயற்கை ஓபியாய்டு கடத்தலை தடுக்கவும், உள்நாட்டு உற்பத்தி வேலைகளை பாதுகாக்கவும், தான் பதவியேற்றதும் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது கணிசமான வரிகளை விதிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.
25 Nov 2024
குரங்கம்மைகுரங்கம்மை-ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO
உலக சுகாதார அமைப்பு (WHO) மீண்டும் குரங்கம்மை-ஐ (Mpox) பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) வகைப்படுத்தியுள்ளது.
25 Nov 2024
மன்னர் சார்லஸ்அரசு விருந்தினராக இந்தியாவிற்கு வருகை தர மன்னர் சார்லஸ் திட்டம்: அறிக்கை
பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வ அரச சுற்றுப்பயணத்தைத் திட்டமிடுவதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
25 Nov 2024
அமெரிக்காடொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற உடன் அமெரிக்க ராணுவத்தில் மீண்டும் திருநங்கைகளுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், திருநங்கைகள் ராணுவத்தில் பணியாற்றுவதைத் தடை செய்வதற்கான நிர்வாக உத்தரவைத் தயாரித்து வருவதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
24 Nov 2024
காலநிலை மாற்றம்குளோபல் சவுத்திற்கு 300 பில்லியன் டாலர்கள் காலநிலை நிதி வழங்கும் ஐநாவின் திட்டத்தை நிராகரித்தது இந்தியா
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP29) முன்மொழியப்பட்ட புதிய காலநிலை நிதித் திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
24 Nov 2024
எலான் மஸ்க்இந்திய தேர்தலை பாத்து கத்துக்கணும்; கலிபோர்னியா வாக்கு எண்ணிக்கை 20 நாட்களாக நடப்பது குறித்து எலான் மஸ்க் கருத்து
அமெரிக்காவின் தேர்தலில் வெற்றி பெற்று டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டாலும், அந்நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.
23 Nov 2024
அமெரிக்காஇனி திருமணம் கடந்த உறவு குற்றமல்ல; நூறாண்டுகள் கடந்த சட்டத்தை ரத்து செய்தது நியூயார்க்
அமெரிக்காவின் நியூயார்க் தனது 1907 ஆம் ஆண்டு திருமணத்திற்கு புறம்பான உறவு சட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
23 Nov 2024
நரேந்திர மோடிபிரதமர் மோடிக்கு சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான உலகளாவிய அமைதி விருது; அமெரிக்க அமைப்பு அறிவிப்பு
இந்திய அமெரிக்க சிறுபான்மையினர் சங்கம் (AIAM), மேரிலாண்டில் உள்ள ஸ்லிகோ செவன்த் டே அட்வென்டிஸ்ட் தேவாலயத்தில் இந்திய அமெரிக்கர்களிடையே சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்து ஆதரவளிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
22 Nov 2024
மன்னர் சார்லஸ்அரசர் சார்லஸின் ஆடம்பரமான முடிசூட்டு விழாவிற்கு இவ்வளவு செலவானதா? கொதிக்கும் பொதுமக்கள்
மே 2023இல் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அதன் அதிகப்படியான செலவீனங்களுக்காக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
22 Nov 2024
கனடாகனடாவில் கடும் பொருளாதார நெருக்கடி: 25% பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக பட்டினி கிடக்கும் அவலம்
கனடாவில் 25% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு சாப்பாடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்டினியாக உள்ளனர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
22 Nov 2024
பங்களாதேஷ்இந்தியா-பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் இடையே டிசம்பரில் பேச்சுவார்த்தை; ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிக்கை?
இந்தியா மற்றும் பங்களாதேஷ் வெளியுறவு அலுவலக ஆலோசனை (எஃப்ஓசி) கட்டமைப்பின் கீழ் டாக்காவில் டிசம்பரில் வெளியுறவு செயலாளர் அளவிலான கலந்துரையாடல்களை இந்தியா மற்றும் பங்களாதேஷ் நடத்த உள்ளன.
22 Nov 2024
இந்தியாநேசக்கரம் நீட்டுகிறதா கனடா? இந்தியாவிற்கு விமானத்தில் வருபவர்களுக்கான ஸ்க்ரீனிங் முறையை தளர்த்தியது
இந்த வார துவக்கத்தில் இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு கனடா அரசு அமல்படுத்தியிருந்த மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.