உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

சர்ச்சைக்குரிய ஜார்ஜ் சோரோஸ் உள்ளிட்ட 19 பேருக்கு அமெரிக்காவின் உயரிய பதக்கம் வழங்கினார் ஜோ பிடென்

அமெரிக்காவில் பதவி விலகும் அதிபர் ஜோ பிடன், வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில், 19 நபர்களுக்கு ஜனாதிபதி பதக்கத்தை, நாட்டின் மிக உயரிய குடிமக்களுக்கான சுதந்திரப் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

டொனால்ட் டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கில் ஜனவரி 10 அன்று தண்டனை விபரங்கள் வெளியிடுவதாக நீதிமன்றம் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு 10 நாட்களுக்கு முன் நடக்கும் பண மோசடி வழக்கில், அவருக்கு தண்டனையை நியூயார்க் நீதிபதி நிர்ணயித்துள்ளார்.

03 Jan 2025

ஏமன்

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளா செவிலியருக்கு ஆதரவாக களமிறங்கும் ஈரான்

ஏமனில் மரண தண்டனையில் உள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு உதவுவதாக ஈரான் உறுதியளித்துள்ளது.

அமெரிக்கா அதிபர் பைடன் மனைவிக்கு பிரதமர் மோடி தந்த விலை உயர்ந்த பரிசு; ஆனால் அவரால் அதைப் பயன்படுத்த முடியாது

பிரதமர் நரேந்திர மோடி தனது ஜூன் 2023 பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவிக்கு வழங்கிய பல பரிசுகளில், 7.5 காரட் செயற்கை வைரம் அடங்கிய ஒரு பெட்டி மிகவும் கவனத்தை ஈர்த்தது.

03 Jan 2025

சீனா

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மனித மெட்டாப்நியூமோவைரஸால் தத்தளிக்கிறது சீனா

இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொரோனா உள்ளிட்ட பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) என்ற வைரஸ் பாதிப்புடன் சீனா தற்போது போராடி வருகிறது.

தென் கொரியாவில் ஜனாதிபதியை கைது செய்ய புலனாய்வாளர்கள் முயல்வதால் பதட்டம்

டிசம்பர் 3 அன்று இராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சி தோல்வியுற்றதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை அவரது இல்லத்தில் இருந்து வெள்ளிக்கிழமை கைது செய்ய முயன்றனர் அதிகாரிகள்.

இந்திய மாணவர்களுக்கு சிக்கல்? வெளிநாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய கல்வித் திட்டத்திற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்புக்குப் பிறகு பணி அனுபவத்தைப் பெறுவதற்கு உதவும் விருப்ப நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டம் பெருகிய விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

பங்களாதேஷ் சுதந்திரத்தை அறிவித்தது ஷேக் முஜிபுர் ரஹ்மான் அல்ல; ஜியாவுர் ரஹ்மான்தான்; பாடப் புத்தகத்தில் திருத்தம்

பங்களாதேஷின் 2025 கல்வியாண்டுக்கான புதிய பள்ளி பாடப்புத்தகங்கள், 1971இல் நாட்டின் விடுதலையை அறிவித்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் அல்ல ஜியாவுர் ரஹ்மான்தான் காரணமானவர் எனத் திருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்த பிறப்பு விகிதம்; வியட்நாமில் வீழ்ச்சியை சந்தித்து வரும் மக்கள்தொகை வளர்ச்சி

வியட்நாம் 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைப் பதிவுசெய்ததாக நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது.

சைபர்ட்ரக் குண்டுதாரி, நியூ ஆர்லியன்ஸ் தாக்குதல் நடத்தியவர்: அதிர்ச்சியளிக்கும் ஒற்றுமைகள் அம்பலம்

லாஸ் வேகாஸில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வெளியே வெடித்த டெஸ்லா சைபர்ட்ரக்கின் ஓட்டுநர் 37 வயதான கொலராடோ ஸ்பிரிங்ஸில் வசிக்கும் மேத்யூ லிவல்ஸ்பெர்கர் என்று உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.

02 Jan 2025

கனடா

செலவுகளை மிச்சப்படுத்த கல்லூரிக்கு விமானத்தில் சென்று வரும் மாணவர்; எந்த நாட்டில் தெரியுமா?

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (யுபிசி) கல்வி பயிலும் இறுதியாண்டு பொருளாதார மாணவர் டிம் சென், வான்கூவரின் உயரும் வாடகை விலைகளுக்கு வழக்கத்திற்கு மாறான தீர்வைக் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ISKCON துறவி சின்மோய் தாஸின் ஜாமீன் மனுவை பங்களாதேஷ் நீதிமன்றம் நிராகரித்தது 

தேசியக் கொடியை அவமதித்ததாக தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இஸ்கான் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரியின் ஜாமீன் மனுவை பங்களாதேஷ் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதல்: டிரக்கில் இருந்து FBI கண்டுபிடித்தது என்ன?

புத்தாண்டு தினத்தன்று நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் ட்ரக்கை ஒட்டி வந்த நபரின் அடையாளத்தை சட்ட அமலாக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய டெஸ்லாவின் சைபர் டிரக்; தீவிரவாத தாக்குதலா?

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் லாஸ் வேகாஸ் ஹோட்டலுக்கு வெளியே பட்டாசுகளை ஏற்றிச் சென்ற டெஸ்லா சைபர்ட்ரக் வாகனம் தீப்பிடித்து வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வாகனம் மோதியதில் 10 பேர் பலி, 30 பேர் காயம்

அமெரிக்காவில் புதன்கிழமை காலை மத்திய நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெஜு ஏர் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகளை மீட்ட தென் கொரியா புலனாய்வாளர்கள்

ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் காக்பிட் குரல் ரெக்கார்டரில் (சிவிஆர்) தரவை தென் கொரிய புலனாய்வாளர்கள் பிரித்தெடுத்துள்ளனர்.

01 Jan 2025

ஹமாஸ்

அக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் உயர்மட்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) புதன்கிழமை, ஜனவரி 1, 2025 அன்று, மூத்த ஹமாஸ் தளபதி அப்துல்-ஹாடி சபாவை அகற்றிவிட்டதாக உறுதிப்படுத்தியது.

31 Dec 2024

சீனா

சின்ஜியாங்கில் உலகின் மிக நீளமான விரைவுச் சுரங்கப்பாதையை சீனா நிறைவு செய்தது: முக்கிய சிறப்பம்சங்கள்

சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் தியான்ஷான் ஷெங்லி சுரங்கப்பாதையை சீனா கட்டி முடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜன்னல்கள் வைக்க தடை

ஆப்கானிஸ்தான் பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் கட்டுவதற்கு தாலிபான்கள் சமீபத்தில் தடை விதித்துள்ளனர்.

சைபர் தாக்குதலில் சிக்கிய அமெரிக்கா கருவூலம்: சீன ஹேக்கர்கள் காரணமா?

சீன அரசால் பாதுகாக்கப்படும் ஹேக்கர்கள் இந்த மாதம் அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின் கணினி பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்து, கருவூலத்தின் முக்கிய ஆவணங்களைத் திருடியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்ய வாரண்ட் 

குற்றஞ்சாட்டப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

30 Dec 2024

விமானம்

விமான விபத்துக்களின்போது பின்பக்கம் அமருவது அதிக பாதுகாப்பைக் கொடுக்குமா? ஆய்வில் வெளியான தகவல்

இரண்டு சமீபத்திய விமான விபத்துக்கள், ஒன்று கஜகஸ்தானிலும் மற்றொன்று தென் கொரியாவிலும், விமானப் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளன.

ஜிம்மி கார்ட்டர் மறைவையடுத்து, தற்போது வயதில் மூத்த முன்னாள் அமெரிக்க அதிபராக இருப்பது இவர்தான்!

78 வயதான டொனால்ட் டிரம்ப், 100 வயதில் ஜிம்மி கார்ட்டர் காலமானதைத் தொடர்ந்து, அதிக வயதுடைய வாழும் அமெரிக்க முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மே டே அறிவித்த விமானி; தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு என்ன காரணம்?

ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் பாங்காக்கில் இருந்து தென் கொரியா நோக்கிச்சென்ற ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

முன்னாள் அமெரிக்க அதிபரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமானார்

1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 39வது அதிபராக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர், தனது 100வது வயதில் ஜார்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று திங்களன்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காசா மருத்துவமனையில் சோதனை; 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்தது இஸ்ரேல்

வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையின் போது பல மருத்துவ ஊழியர்கள் உட்பட 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளனர்.

தென் கொரியா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்து விபத்து; 62 பேர் பலி 

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) காலை தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து 181 பயணிகளுடன் சென்ற ஜெஜு ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் உயிரிழந்தனர்.

கஜகஸ்தானில் நடந்த விமான விபத்திற்கு அஜர்பைஜானிடம் மன்னிப்பு கேட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சனிக்கிழமை (டிசம்பர் 28) அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கேட்டார்.

பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் பாகிஸ்தானில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பாகிஸ்தானில் உள்ள அவரது மூதாதையர் கிராமம் காஹ்வில் இரங்கல்

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் மரணமடைந்தது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள காஹ் என்ற அவரது மூதாதையர் கிராமத்தில் ஆழமாக எதிரொலித்தது.

28 Dec 2024

ஜப்பான்

அதிகரித்து வரும் அச்சுறுத்தல்; பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்த ஜப்பான் முடிவு

ஜப்பானின் அமைச்சரவை 2025 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை 8.7 டிரில்லியன் யென் ($55 பில்லியன்) ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க பெற்றோர்களுக்கு குழந்தைகளை வளர்க்கத் தெரியவில்லை; விவாதத்தைக் கிளப்பிய விவேக் ராமசாமி 

அமெரிக்காவின் பில்லியனர் தொழிலதிபரும், இந்தியக் குடியேறியவர்களின் மகனுமான விவேக் ராமசாமி, அமெரிக்கப் பெற்றோருக்குரிய கலாச்சாரத்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

27 Dec 2024

விசா

இந்தியர்களுக்கு அமெரிக்கா மீண்டும் மில்லியன் விசாக்களை வழங்குகிறது

அமெரிக்கா 2024ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றம் அல்லாத விசாக்களை வழங்கியது.

தென் கொரியாவின் செயல் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், அடுத்து என்ன நடக்கும்

தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூவை பதவி நீக்கம் செய்ய வாக்களித்துள்ளனர்.

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை யேமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் வான்வழி குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

இந்திய-அமெரிக்க உறவில் முக்கியமான நபர்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்கா அஞ்சலி

முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு உலகம் முழுவதும் இருந்து இதயப்பூர்வமான அஞ்சலிகள் வந்த வண்ணம் உள்ளன.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விபத்து: விமானத்திற்குள் இறுதி நிமிடங்களை வீடியோ எடுத்த பயணி

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் எம்ப்ரேயர் 190 ஜெட் விமானம் புதன்கிழமை கஜகஸ்தானின் அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்தம்

ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழனன்று சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாகக் கூறியது.

25 Dec 2024

விபத்து

கஜகஸ்தானில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து; பயணிகள் பலரும் உயிரிழந்திருக்கக்கூடும் எனத்தகவல்

கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே புதன்கிழமை 72 பேருடன் சென்ற விமானம் அவசரமாக தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் மீது நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்; பதிலடி தரப்படும் என தாலிபான்கள் சபதம்

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.