ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்தம்
ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழனன்று சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாகக் கூறியது. இதன் விளைவாக சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் தாமதம் மற்றும் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இது குறித்து X-இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், விமான நிறுவனம் அதன் உள் மற்றும் வெளிப்புற அமைப்புகளில் ஒரு கணினி செயலிழப்பு ஏற்பட்டதை கண்டறிந்தது மற்றும் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டது. "இன்று காலை 7:24 மணி முதல் நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களை இணைக்கும் நெட்வொர்க் உபகரணங்களில் சிஸ்டம் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் உறுதி செய்தவுடன் அடுத்த அறிவிப்பில் உங்களுக்கு அறிவிப்போம். இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்றது.
சிஸ்டம் கோளாறு கண்டறியப்பட்டு, டிக்கெட் விற்பனை நிறுத்தம்
சிஸ்டம் கோளாறு பற்றி அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததாக விமான நிறுவனம் கூறியது. சிஸ்டம் செயலிழப்பை ஏற்படுத்திய ரூட்டரை தற்காலிகமாக மூடிவிட்டதாகவும், இன்று புறப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையை நிறுத்தியதாகவும் அது கூறியது. ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகஸ்ட் 1, 1951 இல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு தனியார் நிறுவனமாக அதன் செயல்பாடுகளை தொடங்கிய இந்த நிறுவனம் விரைவில் அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக மாறியது. 1987 இல், விமான நிறுவனம் மீண்டும் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டது.