NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தலைமறைவு வாழ்க்கை வாழும் உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா அதிபர் புடினின் வாரிசுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தலைமறைவு வாழ்க்கை வாழும் உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா அதிபர் புடினின் வாரிசுகள்
    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய மகள் என நம்பப்படும் எலிசவெட்டா கிரிவோனோகிக்

    தலைமறைவு வாழ்க்கை வாழும் உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா அதிபர் புடினின் வாரிசுகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 29, 2024
    10:11 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய மகள் என நம்பப்படும் 21 வயதான எலிசவெட்டா கிரிவோனோகிக்(Elizaveta Krivonogikh), உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து பாரிஸில் போலி அடையாளத்துடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    உக்ரேனிய தொலைக்காட்சியின் செய்திகளை மேற்கோள்காட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, அந்த பெண், மறைந்த புட்டின் கூட்டாளியான ஒலெக் ருட்னோவின் உறவினராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதாகவும், அவருடைய பெயரை குடும்ப பெயராக பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

    இப்போது லூயிசா ரோசோவா (Luiza Rozova) என்று அழைக்கப்படும் எலிசவெட்டா கிரிவோனோகிக், ரஷ்யாவில் சமூக ஊடகங்களில் ஒரு காலத்தில் ஆக்டிவாக இருந்த போதிலும், 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

    புடினின் காதலி

    லூயிசாவின் தாய் புடினின் காதலியாக இருந்தவர் 

    லூயிசாவின் தாயார், ஸ்வெட்லானா கிரிவோனோகிக், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாறுவதற்கு முன்பு, புடினின் நீண்டகால காதலியாக இருந்தவர்.

    இப்போது ஸ்வெட்லானா ஒரு பெரிய வங்கியில் பங்குகள் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள நன்கு அறியப்பட்ட ஸ்ட்ரிப் கிளப்பின் உரிமையுடன் ஒரு பெரிய செல்வந்தராக உருவாகியுள்ளார்.

    தாய் மற்றும் மகள் இருவரும் கடைசி பெயரை ருட்னோவா பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

    விளாடிமிரோவ்னா என்ற தனது குடும்ப பெயரை மறைத்து வைத்திருந்த லூயிசா ரோசோவா என்றும் அழைக்கப்படும் எலிசவெட்டா கிரிவோனோகிக், ஒரு காலத்தில் பாரிஸ் மேலாண்மை மற்றும் கலைப் பள்ளியில் படிக்கும் மாணவியாக இருந்ததாகவும், ஆனால் அவர் இப்போது படிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

    லூயிசாவும் அவரது தாயும் மொனாக்கோவில் £3.1 மில்லியன் ஆடம்பரமான வீட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

    மகன்கள்

    ஆடம்பர வாழ்க்கை வாழும் புடினின் ரகசிய மகன்கள்

    விளாடிமிர் புடின் மற்றும் முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட் அலினா கபேவா ஆகியோருக்கு இரண்டு ரகசிய மகன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவான் மற்றும் விளாடிமிர் ஜூனியர் என பெயர்கொண்ட இவர்கள் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி மிகவும் ரகசியகம வாழ்கின்றனர் என செய்திகள் தெரிவிக்கிறது. முன்னதாக, தி டோசியர் சென்டர் என்ற ரஷ்ய புலனாய்வு இதழியல் இணையதளம், புடினின் மகன்கள் வால்டாய் ஏரிக்கு அருகில் உள்ள புட்டினின் பெரும் பாதுகாப்பு நிறைந்த தோட்டத்தில், ஆயாக்கள், ஆசிரியர்கள் மற்றும் கிரெம்ளின் காவலர்களுடன் வசிப்பதாக கூறியது. அவர்களின் பிறப்பு பற்றிய அதிகாரப்பூர்வ பதிவுகள் எதுவும் இல்லாமல் அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவர்கள் தனி விமானங்கள், படகுகள் மற்றும் கவச ரயில்களில் பயணம் செய்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளாடிமிர் புடின்
    ரஷ்யா
    உக்ரைன்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    விளாடிமிர் புடின்

    பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் இந்தியா
    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல் ரஷ்யா
    உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர் கனடா
    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாத உயிர்களை காவு வாங்கும் -ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யா

    ரஷ்யா

    லிமோசைனை ஒட்டிய ரஷ்யா அதிபர் புடினும், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உம்; வைரலாகும் காணொளி கிம் ஜாங் உன்
    ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி உலகம்
    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை  இந்தியா
    'பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன': ரஷ்யா  பிரதமர் மோடி

    உக்ரைன்

    ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு  ரஷ்யா
    போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ரஷ்யா
    ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிரான புதுடெல்லி பிரகடனத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? புது டெல்லி
    கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025