இந்தியாவின் "Make in India" திட்டத்தினை பாராட்டிய ரஷ்ய அதிபர் புடின்
இந்தியாவில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட "மேக் இன் இந்தியா" திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் புடின் தெரிவித்துள்ள கருத்தில், "இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை அவசியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாங்கள் எங்கள் உற்பத்தி மையத்தை இந்தியாவில் அமைக்க தயாராக உள்ளோம். இந்திய பிரதமரும், இந்திய அரசும் நிலையான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்." என்றார்.
Twitter Post
இந்தியாவில் முதலீடு செய்யும் வாய்ப்பையும் புடின் மறுக்கவில்லை
இதேபோல், "இந்தியாவில் முதலீடு செய்வது நிச்சயமாக லாபகரமாகும் என்று நாங்கள் நம்புகிறோம். ரஷ்யாவில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை விரிவடைகிறது. இதனால், ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான தேவையுள்ளது," என்றும் அவர் கூறினார். "கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர் மதிப்பில் தானியங்களை ஏற்றுமதி செய்தோம். பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டம் பாராட்டுக்குரியது," என்று அவர் மேலும் கூறினார். பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்ட அழைப்பின் பின்னர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருவதாக குறிப்பிட்டுள்ளது.