NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணி; மதம் காரணமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணி; மதம் காரணமா?
    கோஷும், அவரது நண்பரும் உள்ளூர் சந்தைக்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணி; மதம் காரணமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 02, 2024
    03:42 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்காளத்தின் பெல்கோரியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சயன் கோஷ், வங்கதேசத்தின் டாக்காவில் தாக்கப்பட்டதாக நியூஸ் 18 இன் அறிக்கை கூறுகிறது.

    கோஷும், அவரது நண்பரும் உள்ளூர் சந்தைக்கு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு இந்தியன் மற்றும் இந்து என்பதற்காக தான் இலக்கு வைக்கப்பட்டதாக கோஷ் கூறினார்.

    "முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 5-6 சிறுவர்கள் வந்து, நான் எங்கிருந்து வருகிறேன், இங்கு என்ன செய்கிறேன் என்று என்னிடம் கேட்டார்கள்" என்று கோஷ் நியூஸ் 18 இடம் கூறினார்.

    தாக்குதல் விவரங்கள்

    வங்கதேசத்தில் நடந்த வன்முறை தாக்குதல், திருட்டு பற்றி கோஷ் கூறுகிறார்

    அவர் தனது தேசியம் மற்றும் மதத்தை வெளிப்படுத்திய பிறகு, குழு தன்னை அடிக்கத் தொடங்கியது என்று கோஷ் குற்றம் சாட்டினார்.

    கத்தி மற்றும் கல்லைப் பயன்படுத்தி கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.

    "நான் என் கண்பார்வை இழந்திருக்கலாம்," என்று அவர் மேலும் கூறினார்.

    இந்த சம்பவத்தில் கோஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் அடித்து நொறுக்கப்பட்டதோடு, அவர்களது உடைமைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.

    "உதவி செய்வதற்குப் பதிலாக...(வழிப்போக்கர்)... வங்கதேசத்தில் எனது தேசியம் மற்றும் நோக்கம் குறித்து என்னிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்," என்று கோஷ் கூறினார்.

    தாக்குதலுக்குப் பிறகு அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஊழியர்கள் கூட தயங்கினர் என்றும் அவர் கூறினார்.

    பதில்

    சம்பவத்தை உறுதி செய்த குடும்பத்தினர், புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்

    இதற்கிடையில், சயனின் தந்தை சுகந்தோ கோஷ், சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், தனது மகனின் நிலை குறித்து கவலையடைவதாகக் கூறினார்.

    "நாங்கள் போக வேண்டாம் என்று சொன்னோம், ஆனால் அவர் வற்புறுத்தினார், அவர் அதிர்ச்சியில் இருக்கிறார்," என்று சுகந்தோ கூறினார்.

    இதுதொடர்பாக உயர் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    தாக்குதலுக்குப் பிந்தைய துன்புறுத்தல்

    உள்ளூர் அதிகாரிகளால் கோஷின் நண்பரின் குடும்பம் துன்புறுத்தப்பட்டது

    தாக்குதலுக்குப் பிறகு, கோஷ் குணமடைய தனது நண்பரின் வீட்டில் தங்கினார், ஆனால் உள்ளூர் அதிகாரிகளால் அவரது நண்பரின் குடும்பத்தினர் மீது துன்புறுத்தப்பட்டதாக புகார் செய்தார்.

    "ஒரு இந்தியரை அழைத்ததற்காக எனது நண்பரின் பெற்றோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்தனர்," என்று கோஷ் கூறினார்.

    தேச துரோக குற்றச்சாட்டில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    சுற்றுலா
    இந்தியர்கள்
    மேற்கு வங்காளம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பங்களாதேஷ்

    பங்களாதேஷ் போராட்டத்தினால் 115 பேர் உயிரிழப்பு: நாடு திரும்பிய கிட்டத்தட்ட 1,000 இந்தியர்கள்  இந்தியர்கள்
    அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம்  உலகம்
    பங்களாதேஷ் அகதிகளுக்கு மேற்கு வங்கம் அடைக்கலம் தரும் என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி  மேற்கு வங்காளம்
    மம்தா பானர்ஜியின் அடைக்கல வாக்குறுதி, 'பயங்கரவாதிகளை ஈர்க்கக்கூடும்' என்று பங்களாதேஷ் கவலை மம்தா பானர்ஜி

    சுற்றுலா

    பூமியின் இருள் படியாத அதிசய இடங்கள்: சூரியன் மறையாத இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் சுற்றுலாத்துறை
    ₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது  அமெரிக்கா
    ஜெய்சால்மர்: தங்க நகரத்தின் கட்டிடக்கலை அற்புதங்களை சுற்றி பார்க்கலாமா? பயணம் மற்றும் சுற்றுலா
    தென்னிந்தியாவின் அமைதியான மலைவாசஸ்தலங்களுக்கு போகலாமா ஒரு விசிட் மலைகள்

    இந்தியர்கள்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை அமெரிக்கா
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா? இங்கிலாந்து

    மேற்கு வங்காளம்

    சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு இந்தியா
    சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம்  பிரதமர் மோடி
    திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு திரிணாமுல் காங்கிரஸ்
    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மக்களவை தேர்தலில் போட்டி  கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025