தொழில்நுட்பம்: செய்தி
அசுர வளர்ச்சி பெறும் அரட்டை; வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக வந்து இழுத்து மூடப்பட்ட ஹைக் மெசஞ்சர் கதை தெரியுமா?
சோஹோ நிறுவனத்தின் உடனடிச் செய்தி அனுப்பும் செயலியான அரட்டை இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஆதிக்கம் செலுத்தி வரும் வாட்ஸ்அப்பிற்கு வலுவான உள்நாட்டுப் போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
வரைவு ஆன்லைன் கேமிங் விதிகளை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளை கேட்கிறது IT அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள், 2025 இன் வரைவை பொதுமக்களின் ஆலோசனைக்காக வெளியிட்டுள்ளது.
லித்தியம் பேட்டரி தீ அபாயம் காரணமாக விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த எமிரேட்ஸ் தடை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான எமிரேட்ஸ், அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் ஒரு முக்கியமான புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு பதிவால் பின்னடைவை சந்தித்த நெட்ஃபிலிக்ஸ்; பின்னணி என்ன?
கோடீஸ்வரரான எலான் மஸ்க் பதிவிட்ட ஒரேயொரு எக்ஸ் பதிவால், நெட்ஃபிலிக்ஸ்க்கு எதிராக சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பலையை உருவாக்கி உள்ளது.
விண்டோஸ் 10 ஆதரவு அக்டோபர் 14 அன்று முடிவடைகிறது: அடுத்து என்ன செய்வது?
மைக்ரோசாப்ட் அக்டோபர் 14, 2025 அன்று விண்டோஸ் 10க்கான ஆதரவை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசாங்க முடக்கம் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை கடுமையாக பாதிக்கும் என கணிப்பு
அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணி முடக்கத்தத்தில் நுழைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொழிலாளர் துறையின் பணியாற்றும் திறனை தடுக்க, குறிப்பாக H-1B விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்ப செயலாக்கங்களை முற்றாக முடக்கும் என கூறப்படுகிறது.
H1B விசா நெருக்கடிகளுக்கு இடையே UAE-ன் புதிய விசிட் விசாக்கள், எளிமைப்படுத்தப்பட்ட விதிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
உலகளாவிய தொழில் வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களை ஈர்க்கும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதன் விசா மற்றும் குடியிருப்பு கட்டமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்களை அறிவித்துள்ளது.
ஷாய் ஹுலுட் வைரஸ் மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்; மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் டேட்டா மையங்களுக்குப் புதிய ஷாய் ஹுலுட் என்ற மால்வேர் மூலம் மிகப் பெரிய சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்அப்புக்கு மாற்றாக வைரலாகும் அரட்டை ஆப்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்தியாவில் வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக, சென்னையைச் சேர்ந்த சோஹோ கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள உள்நாட்டு மெசேஜிங் செயலியான அரட்டை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அமைச்சர்களின் பரிந்துரைகளால் தற்போது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆக மாறும் ஏஐ; 2030க்குள் 40% வேலைகளை காலி செய்யும் என சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிஎஸ்என்எல்லின் சுதேசி 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி நெட்வொர்க்கை சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று தொடங்கி வைத்தார்.
சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி: உலகின் மொத்த ரோபோக்களை விடவும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களுடன் சாதனை
சீனா தனது உற்பத்தித் துறையில் 20 லட்சத்திற்கும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் மூலம் உலகளவில் தொழிற்சாலை ரோபோக்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியாவில் தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகை காலம் 200,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கணிப்பு
இந்தியாவின் வரவிருக்கும் பண்டிகை காலம் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் திறமை தீர்வுகள் வழங்குநரான NLB சேவைகள் அறிக்கை தெரிவித்துள்ளது.
சாட்ஜிபிடியில் விளம்பரங்களை வெளியிட ஓபன்ஏஐ திட்டம்; வருவாயைப் பெருக்க புதிய முயற்சிகள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஓபன்ஏஐ, தனது வருவாய் ஈட்டும் உத்திகளைப் பன்முகப்படுத்த, பிரத்யேகமான உள் விளம்பரக் குழுவை அமைப்பதில் மும்முரம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
H-1B விசா லாட்டரி முறையில் மாற்றங்கள் அமலானால் இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் பெரிதும் பயன்படுத்தும் H-1B விசா லாட்டரி முறையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் புதிய மாற்றங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
H-1B மாற்றங்களை விட இந்த அச்சுறுத்தல் தான் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்
H-1B விசா கட்டணங்களில் சமீபத்திய உயர்வு இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க H-1B குழப்பத்திற்கு மத்தியில், 'K விசா' மூலம் STEM நிபுணர்களை ஈர்க்க தயாராகிறது சீனா
அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள குறிப்பாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் அம்சம் அறிமுகம்; இனி வாட்ஸ்அப்பிலேயே நானோ பனானா புகைப்படங்களை உருவாக்கலாம்
வாட்ஸ்அப் பயனர்கள் இனி செயலியில் இருந்து நேரடியாகவே செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட படங்களை உருவாக்கவும், திருத்தவும் முடியும். இதற்காக Perplexity AI உடன் வாட்ஸ்அப் இணைந்துள்ளது.
கலிபோர்னியாவில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் அமெரிக்க போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
செப்டம்பர் 3 ஆம் தேதி கலிபோர்னியாவில் சாண்டா கிளாரா காவல் துறை (SCPD) முகமது நிஜாமுதீன் என்ற 30 வயது இந்திய தொழில்நுட்ப வல்லுநர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
IT துறையிலும் நெபொடிசம் ஆதிக்கமா? விவாதத்தை தூண்டும் மைக்ரோசாப்ட் ஊழியரின் வைரலான வீடியோ
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளரான உமே ஹபீபா, சிலிக்கான் பள்ளத்தாக்கில் பரவலாக உள்ள நெபொடிசம் (Nepotism) முறையை கடுமையாக சாடியுள்ளார்.
அரசியலிலும் செயற்கை நுண்ணறிவு; ஜப்பானில் கட்சித் தலைவராக ஏஐ நியமனம்
ஜப்பானின் பாத் டு ரீபர்த் (Path to Rebirth) என்ற அரசியல் கட்சி, தனது தலைவரை ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டு மாற்றியமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் வான் பாதுகாப்பில் ஒரு புதிய சகாப்தம்; அயர்ன் பீம் லேசர் ஆயுதத்தை பயன்படுத்த் தொடங்கியது
ராணுவத் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக, இஸ்ரேல் உலகின் முதல் சக்திவாய்ந்த மற்றும் போரில் சோதிக்கப்பட்ட லேசர் இடைமறிப்பு அமைப்பான அயர்ன் பீமை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் என்விடியா சிப்களை இறக்குமதி செய்வதை நிறுத்த சீனா முடிவு; காரணம் என்ன?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்பப் போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது.
டிரெண்டாகும் கூகுள் நானோ பனானா மற்றும் விண்டேஜ் சேலையில் இவ்ளோ பாதுகாப்பு சிக்கல்கள் இருக்கா? மக்களே உஷார்
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் கூகுள் நானோ பனானா மற்றும் விண்டேஜ் சேலை போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புகைப்பட எடிட்டிங் போக்குகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: மெசேஜ் பதில்கள் இனி தனி Threadகளாகக் குரூப் செய்யப்படும்
வாட்ஸ்அப் தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்தது அல்பேனியா; ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக நியமனம்
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Signal இப்போது உங்கள் சாட்களை இலவசமாக backup செய்ய அனுமதிக்கிறது
தனியுரிமையை மையமாகக் கொண்ட செய்தியிடல் செயலியான Signal, பயனர்கள் தங்கள் சாட்களை இலவசமாக backup எடுக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.
சிப் தயாரிப்பாளர்களுக்கு $20 பில்லியன் செமிகண்டக்டர் ஊக்கத்திட்டம் வழங்க மத்திய அரசு ஆலோசனை
உலகளாவிய மற்றும் உள்நாட்டு semiconductor உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்காக இந்தியா 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஊக்கத் திட்டத்தைத் தயாரித்து வருகிறது.
செங்கடலில் கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் சேதம்: உலகளாவிய இன்டர்நெட் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூர் சேவை பாதிப்பு
செங்கடலில் உள்ள பல கடலுக்கடியில் செல்லும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சேதமடைந்துள்ளன.
இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும்; அந்த்ரோபிக் சிஇஓ கணிப்பு
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான அந்த்ரோபிக்கின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, ஒயிட் காலர் வேலைகளில் கணிசமான பகுதி ஏஐயால் அகற்றப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு: ஆரக்கிள், சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனங்களில் நூற்றுக்கணக்கானோர் பணிநீக்கம்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழில்நுட்பத் துறையில் தொடரும் வேலைவாய்ப்புக் குறைப்பு அலை, இன்னும் குறையவில்லை.
இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு 32-பிட் மைக்ரோப்ராசெசர் விக்ரம்
இந்தியா தனது முதல் உள்நாட்டு 32-பிட் நுண்செயலியை (micro processor) வெளியிட்டுள்ளது. அதற்கு 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா முயற்சியில் புதிய மைல்கல்; டிஜிலாக்கர் தளத்தில் நாடு முழுவதும் 2,000 அரசு சேவைகள் ஒருங்கிணைப்பு
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD), நாடு முழுவதும் சுமார் 2,000 அரசு சேவைகளை வெற்றிகரமாக டிஜிலாக்கர் மற்றும் இ-மாவட்ட தளங்களில் ஒருங்கிணைத்துள்ளது.
23 வயது இந்திய இளைஞருக்கு மெட்டாவில் ₹3.6 கோடி சம்பளத்தில் வேலை; மனோஜ் டூமுவின் வெற்றிப் பயணம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது பொறியாளர் மனோஜ் டூமு, மெட்டாவில் இயந்திர கற்றல் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிய ஒரு கனவு வேலையைப் பெற்றுள்ளார்.
செயற்கை நுண்ணறிவால் நான்கு நாள் வேலை வாரம் சாத்தியம்; NVIDIA CEO ஜென்சென் ஹுவாங் கருத்து
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எதிர்காலத்தில் வேலை செய்யும் முறையை மாற்றியமைத்து, நான்கு நாள் வேலை வாரத்திற்கு வழிவகுக்கும் என்று NVIDIA நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங் கூறியுள்ளார்.
250 கோடி ஜிமெயில் கணக்குகளுக்கு முக்கியப் பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டது கூகுள்
பெரிய அளவிலான தரவு திருட்டுச் செயல்பாடு காரணமாக சுமார் 250 கோடி ஜிமெயில் கணக்குகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூகுள் நிறுவனம் முக்கியப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
டிஜிட்டல் வரிகளை விதிக்கும் நாடுகள் மீது வரிகள், சிப் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிஜிட்டல் வரிகள் மற்றும் தொடர்புடைய விதிமுறைகளை நீக்காத நாடுகளுக்கு "கணிசமான" புதிய வரிகளை விதிக்கவும், அமெரிக்க சிப்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
காப்புரிமை சிக்கலை தவிர்க்க ஊடக நிறுவனங்களுக்கு வருவாய் திட்டத்தை அறிவித்தது Perplexity AI
கூகுளுக்குப் போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு தேடுபொறியை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Perplexity நிறுவனம் ஊடக நிறுவனங்களுடனான விமர்சனங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களைத் தீர்க்க ஒரு முக்கிய முயற்சியை அறிவித்துள்ளது.
எலான் மஸ்கின் நியூராலிங்க் பெற்ற முதல் நோயாளி; 18 மாதங்களுக்குப் பிறகு வெளியிட்ட முக்கிய தகவல்
எலான் மஸ்கின் நியூராலிங்க் மூளை உள்வைப்பைப் பெற்ற முதல் நபராகிய நோலாண்ட் அர்பாக், அறுவை சிகிச்சை செய்து 18 மாதங்களுக்குப் பிறகு ஒரு நம்பிக்கையான தகவலைப் பகிர்ந்துள்ளார்.