LOADING...
சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆக மாறும் ஏஐ; 2030க்குள் 40% வேலைகளை காலி செய்யும் என சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை
2030க்குள் 40% வேலைகளை ஏஐ காலி செய்யும் என சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை

சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆக மாறும் ஏஐ; 2030க்குள் 40% வேலைகளை காலி செய்யும் என சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2025
05:21 pm

செய்தி முன்னோட்டம்

ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அக்செல் ஸ்பிரிங்கர் விருதைப் பெற்ற பின்னர் பேசிய ஆல்ட்மேன், ஏஐ அமைப்புகள் எதிர்பார்ப்பதை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், 2030 க்குள் அவை மனிதர்களால் தீர்க்க முடியாத சிக்கல்களைக் கையாளக்கூடிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் என்ற நிலையை அடையலாம் என்றும் கணித்துள்ளார். தற்போதைய ஜிபிடி-5 மாடலே தன்னை விடவும் பலரை விடவும் புத்திசாலித்தனமானது என்று கூறிய சாம் ஆல்ட்மேன், ஏஐயின் வளர்ச்சி, தொழில்துறை முழுவதும் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்றார்.

ஆட்டோமேஷன்

ஆட்டோமேஷனால் ஏற்படும் சவால்கள்

அவரது கணிப்பின்படி, ஏஐ மனிதர்களின் வேலைகளை முற்றிலுமாக நீக்காமல் போனாலும், பொருளாதாரத்தில் உள்ள மொத்தப் பணிகளில் 30% முதல் 40% வரை உள்ள பணிகளை ஆட்டோமேட் செய்யும் அபாயம் உள்ளது. இந்த மாற்றத்தால் ஏற்படும் சவால்களை அவர் ஒப்புக்கொண்டாலும், ஏஐ ஆனது மனிதனை மையமாகக் கொண்ட ஒரு கருவியாக இருக்கும் என்பதில் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். எதிர்காலத்தில், மனிதர்கள் எப்படிக் கற்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

வன்பொருள்

புதிய வன்பொருள் சாதனங்கள்

ஓபன்ஏஐ நிறுவனம் புதிய வன்பொருள் சாதனங்களை உருவாக்க ஆய்வு செய்து வருவதாக ஆல்ட்மேன் தெரிவித்தார். இது கணினிகளை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, முழுவதுமாக ஏஐயால் இயக்கப்படும் பணிகளைக் கையாள உதவும் என்றும் அவர் கூறினார். இந்தக் கண்டுபிடிப்பு, கீபோர்டு மற்றும் டச்ஸ்கிரீனுக்குப் பிறகு கணினித் துறையில் ஏற்படும் மூன்றாவது பெரிய மாற்றம் என்று அவர் விவரித்தார்.