LOADING...
எஸ்யூவி ஆதிக்கத்தை முறியடித்த மாருதியின் செடான் கார்; 2025இல் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் டிசையர் முதலிடம்
2025இல் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் டிசையர் முதலிடம்

எஸ்யூவி ஆதிக்கத்தை முறியடித்த மாருதியின் செடான் கார்; 2025இல் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் டிசையர் முதலிடம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 28, 2025
03:13 pm

செய்தி முன்னோட்டம்

2025 ஆம் ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவி ரக கார்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோதிலும், விற்பனைப் பட்டியலில் ஒரு செடான் கார் முதலிடம் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் மூன்று கார்கள் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளன. கடந்த ஜனவரி முதல் நவம்பர் 2025 வரையிலான காலக்கட்டத்தில், மாருதி சுஸூகி டிசையர் சுமார் 1,95,000 யூனிட்கள் விற்பனையாகி இந்தியாவின் நம்பர் 1 காராக உருவெடுத்துள்ளது. கடந்த 41 ஆண்டுகளில் ஒரு செடான் கார் முதலிடம் பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2018லும் டிசையர் இதே சாதனையைப் புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் இப்போதும் டிசையரைத் தேர்ந்தெடுப்பதை இது காட்டுகிறது.

கார்கள்

டாப் 5 இடங்களைப் பிடித்த கார்கள்

எஸ்யூவி ரகக் கார்களில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் டாடா நெக்ஸான் ஆகியவை கடும் போட்டியை அளித்துள்ளன. பட்டியலில் மாருதி சுஸூகி டிசையர் 1,95,000 யூனிட்கள் விற்பனையுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டா 1,87,000 யூனிட்கள் விற்பனையுடன் எஸ்யூவி பிரிவில் முன்னிலை வகிக்கிறது. டாடா நெக்ஸான் 1,81,000 யூனிட்களுடன் பாதுகாப்பான கார் என்ற பெயருடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மாருதி சுஸூகி வேகன் ஆர் 1,79,000 யூனிட்களுடன் நடுத்தர குடும்பங்களின் ஃபேவரைட் மாடலாக விற்பனையில் நான்காவது இடம் பிடித்துள்ளது. மாருதி சுஸூகி எர்டிகா 1,75,000 யூனிட்களுடன் அதிக விற்பனையாகும் எம்பிவி காராக பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.

மாருதி

எஸ்யூவி மோகத்தைத் தாண்டிய மாருதி

இந்தியாவில் விற்கப்படும் கார்களில் 55 சதவீதம் எஸ்யூவி ரகமாக இருந்தாலும், மாருதி சுஸூகி தனது பட்ஜெட் மற்றும் குடும்பக் கார்கள் மூலம் சந்தையில் தனது பலத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. விலை குறைவு, பராமரிப்புச் செலவு குறைவு மற்றும் ரீசேல் மதிப்பு ஆகிய காரணிகளே மாருதி கார்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற ஜாம்பவான்கள் கூட டிசையரின் விற்பனை வேகத்திற்கு முன்னால் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

Advertisement