LOADING...
ஷாய் ஹுலுட் வைரஸ் மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்; மத்திய அரசு எச்சரிக்கை
ஷாய் ஹுலுட் வைரஸ் மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்

ஷாய் ஹுலுட் வைரஸ் மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்; மத்திய அரசு எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2025
01:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் டேட்டா மையங்களுக்குப் புதிய ஷாய் ஹுலுட் என்ற மால்வேர் மூலம் மிகப் பெரிய சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியக் கணினி அவசர காலப் பதிலளிப்புக் குழு (CERT-In) வெளியிட்டுள்ள இந்த அவசர எச்சரிக்கையில், இந்தப் புதிய வைரஸ் இந்தியக் கட்டமைப்பு மற்றும் முக்கியமான டேட்டாவைப் பெரிய அளவில் குறிவைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாய் ஹுலுட் என்பது வழக்கமான மால்வேர் வகைகளிலிருந்து மாறுபட்டு, மிகவும் நுட்பமான முறையில் செயல்படக் கூடியது. இது பாதிக்கப்பட்ட அமைப்புகளில் நீண்ட காலத்திற்குக் கண்டறியப்படாமல் மறைந்திருந்து, முக்கியமான நிதி, தனிநபர் தகவல்கள் மற்றும் நிறுவன இரகசியங்களைத் திருடும் திறன் கொண்டது.

வைரஸ் பரவுதல்

வைரஸ் பரவுதலுக்கான வாய்ப்பு

குறிப்பாக, மின்னஞ்சல் இணைப்புகள், போலியான மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் பாதிக்கட்டப்பட்ட இணையதளங்கள் மூலம் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று CERT-In தெரிவித்துள்ளது. அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் உடனடியாகத் தங்களின் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தவும், ஊழியர்களுக்குச் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெரியாத மூலங்களிலிருந்து வரும் மின்னஞ்சல்களைத் திறப்பதைத் தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய சைபர் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறியவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் ஃபயர்வால்கள் மற்றும் பாதுகாப்புப் பட்டியலை உடனடியாகப் புதுப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.