உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
இனி வெனிசுலாவை அமெரிக்கா ஆளும்! டிரம்ப் வெளியிட்ட அதிரடி திட்டம்; எண்ணெய் வளத்தைக் கைப்பற்றத் திட்டம்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டைத் தற்காலிகமாக அமெரிக்காவே நிர்வகிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் போர்க்கப்பலில் கைதியாக மதுரோ! நியூயார்க்கில் காத்திருக்கும் விசாரணை; டிரம்ப் அதிரடி
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு, தற்போது அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் நியூயார்க்கிற்குக் கொண்டு செல்லப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பேருந்து ஓட்டுநராக இருந்து வெனிசுலா அதிபராக உயர்ந்தவரின் வீழ்ச்சி; யார் இந்த நிக்கோலஸ் மதுரோ
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, உலக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே உலுக்கிய அதிரடி! வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வெனிசுலா தலைநகரில் பயங்கர வெடிச்சத்தம்: அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதா?
வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று (ஜனவரி 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் பயங்கரம்! 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் இடிந்து 2 பேர் பலி
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (ஜனவரி 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
"அமைதி போராட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபாட்டால்...": ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரானிய அரசாங்கம் அமைதியான போராட்டங்களை "வன்முறை" மூலமாக அடக்கினால், ஈரானின் தற்போதைய அமைதியின்மையில் தலையிட வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
பலுசிஸ்தானில் சீன ராணுவம்? - இந்தியாவிற்கு பெரும் ஆபத்து என பலுச் தலைவர் எச்சரிக்கை
பலுசிஸ்தான் பகுதியில் இன்னும் சில மாதங்களில் சீனா தனது ராணுவ படைகளை களம் இறக்க வாய்ப்புள்ளதாகவும், இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் பலுச் தலைவர் மிர் யார் பலுச் எச்சரித்துள்ளார்.
'மன்னிச்சிருங்க.. போதையில் செஞ்சுட்டேன்'; திருடிய பொருளைத் திருப்பிக் கொடுத்த திருடன்; வைரலாகும் கடிதம்!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஒரு பழங்கால இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் நடந்த விசித்திரமான திருட்டுச் சம்பவம், ஒரு நெகிழ்ச்சியான மற்றும் வியப்பான முடிவுக்கு வந்துள்ளது.
ஈரானில் வெடித்தது மக்கள் புரட்சி: பலர் பலி, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கோஷம்
ஈரானில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
பங்களாதேஷில் குறிவைக்கப்படும் இந்துக்கள்; மேலும் ஒரு நபர் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார்
பங்களாதேஷில் நடந்த மற்றொரு அதிர்ச்சியூட்டும் கும்பல் வன்முறை சம்பவத்தில், 50 வயது இந்து ஒருவர் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார்.
ரஷ்யா அதிபர் புடின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது உக்ரைன் அல்ல: அமெரிக்காவின் CIA
உக்ரைன் நடத்திய சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வீட்டை குறிவைக்கவில்லை என்று மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்து ஸ்கை ரிசார்ட் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 40 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயம்
ஜனவரி 1 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் உயர்மட்ட ஆல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கிரான்ஸ் மொன்டானாவில் ஒரு வெடிப்பு ஏற்பட்டது.
குர்ஆன் மீது கைவைத்து நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக மம்தானி பதவியேற்றார்
புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவுக்கு பிறகு நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக ஜோஹ்ரான் மம்தானி பதவியேற்றார்.
வானவேடிக்கையுடன் 2026 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற உலக நாடுகள்: காண்க!
உலகம் முழுவதும் இன்று 2026-ம் ஆண்டு கோலாகலமாக பிறந்தது.
நெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் தீக்கிரை
நெதர்லாந்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
உலகின் முதல் நாடாக 2026 ஆம் ஆண்டை வாணவேடிக்கைகளுடன் வரவேற்றது நியூஸிலாந்து!
நியூசிலாந்தின் ஆக்லாந்து, 2026 ஆம் ஆண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்கும் முதல் பெரிய நகரமாக மாறியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின் போது "நாங்களும் மத்தியஸ்தம் செய்தோம்": சீனா கிளப்பும் புதிய சர்ச்சை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' மோதலின் போது, பதற்றத்தை தணிக்க தாங்களும் முக்கிய பங்காற்றியதாக சீனா உரிமை கொண்டாடியுள்ளது.
இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமென அமெரிக்க ஆய்வு மையம் கணிப்பு
2026-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த 'கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்' (CFR) எனும் புகழ்பெற்ற ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இல்லத்தரசியாக தொடங்கி வங்கதேச அரசியலின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறிய கலிதா ஜியா!
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் மற்றும் அந்நாட்டின் அரசியல் திசையை தீர்மானித்த முக்கிய தலைவர்களில் ஒருவரான பேகம் கலிதா ஜியா இன்று காலமானார். அவருக்கு வயது 80.
"அவர் வீடு மீதே தாக்குதலா?": அதிபர் புடினின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்து டிரம்ப் காட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்: ஒரு சகாப்தம் முடிவு
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான 'வங்கதேச தேசியக் கட்சியின்' (BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை காலமானார்.
போர் மேகம்? தைவானைச் சூழ்வதுபோல் சீனா போர் ஒத்திகை நடத்தியதால் பரபரப்பு
தைவானைச் சுற்றி சீனா மேற்கொண்டு வரும் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியால் ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
2026 புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாட்டிற்கும் கடைசி நாட்டிற்கும் 26 மணிநேர வித்தியாசமா! சுவாரஸ்ய பின்னணி
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை. பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்கள் (Time Zones) காரணமாக, சில நாடுகள் முன்னதாகவும் சில நாடுகள் பல மணிநேரம் கழித்தும் புத்தாண்டை வரவேற்கின்றன.
உக்ரைன்- ரஷ்யா அமைதி திட்டம் "கிட்டத்தட்ட 95 சதவீதம்" நிறைவு: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை அந்த நாடு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மியான்மரில் பொதுத்தேர்தல்: ராணுவ ஆட்சியின் கீழ் வாக்குப்பதிவு தொடக்கம்
மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுத்தேர்தல் இன்று (டிசம்பர் 28) தொடங்கியுள்ளது.
டிரம்ப்-ஜெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைனில் ரஷ்யா கடும் தாக்குதல்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகக்கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் 700 கி.மீ வேகம்! சீனாவின் மேக்லீவ் ரயில் படைத்த புதிய உலக சாதனை
சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழக (NUDT) ஆராய்ச்சியாளர்கள், அதிவேக போக்குவரத்து தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளனர்.
வேலையே செய்யாத நிறுவனத்தில் இருந்து வந்த பணிநீக்க இமெயிலால் ஷாக்; வைரலாகும் எக்ஸ் பதிவு
பெண் ஒருவருக்கு அவர் ஒருபோதும் வேலை செய்யாத நிறுவனத்திடம் இருந்து பணிநீக்க இமெயில் ஒன்று வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பங்களாதேஷில் பள்ளி இசை நிகழ்ச்சி மீது அடிப்படைவாத கும்பல் தாக்குதல்: 20 மாணவர்கள் காயம்
பங்களாதேஷின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீது மத அடிப்படைவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை: ரூ.27,000 கோடி அபராதம்
மலேசியாவின் மிகப்பெரிய நிதி முறைகேடு வழக்கான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜப்பானில் பயங்கரம்: தொழிற்சாலையில் புகுந்து 14 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்; மர்ம திரவத்தால் பீதி!
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மிஷிமா நகரில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (டிசம்பர் 26) மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்
2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்: டிரம்ப் அறிவிப்பு
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் மிக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (டிசம்பர் 26) அறிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படும் ஹிந்துக்கள்: நிலத்தகராறில் இந்து நபர் அடித்துக் கொலை
பங்களாதேஷில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், மிரட்டி பணம் பறிக்கும் மற்றும் நிலத்தைப் பறிக்கும் நோக்கில் இந்து நபர் ஒருவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா-இந்தியா உறவுகளை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக பெய்ஜிங் குற்றம் சாட்டுகிறது
இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா தனது பாதுகாப்பு கொள்கையை சிதைப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
17 ஆண்டு காலத்திற்கு பிறகு பங்களாதேஷ் திரும்பிய தாரிக் ரஹ்மான்; இந்தியாவிற்கு பாதிப்பா?
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 2008-ஆம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருந்தார்.
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: பெட்ரோல் குண்டு வீசியதில் இளைஞர் பலி
பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தலைநகர் டாக்காவில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
'தேர்தலை தடம் புரள செய்வதற்காக யூனுஸ் ஆட்சி உஸ்மான் ஹாடியை கொன்றது': சகோதரர் குற்றசாட்டு
பங்களாதேஷ் மாணவர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடியின் படுகொலை பரவலான அமைதியின்மையை தூண்டியுள்ளதுடன், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.