LOADING...
வேலையே செய்யாத நிறுவனத்தில் இருந்து வந்த பணிநீக்க இமெயிலால் ஷாக்; வைரலாகும் எக்ஸ் பதிவு
வேலையே செய்யாத நிறுவனத்தில் இருந்து வந்த பணிநீக்க இமெயிலால் ஷாக்

வேலையே செய்யாத நிறுவனத்தில் இருந்து வந்த பணிநீக்க இமெயிலால் ஷாக்; வைரலாகும் எக்ஸ் பதிவு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 27, 2025
05:55 pm

செய்தி முன்னோட்டம்

பெண் ஒருவருக்கு அவர் ஒருபோதும் வேலை செய்யாத நிறுவனத்திடம் இருந்து பணிநீக்க இமெயில் ஒன்று வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முதலில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், பின்னர் உண்மையை அறிந்து நிம்மதியடைந்தார்.

அதிர்ச்சி

எதிர்பாராத அதிர்ச்சியும் குழப்பமும்

சைமன் இன்காரி என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவின்படி, அவரது மனைவிக்கு திடீரென ஒரு இமெயில் வந்துள்ளது. அதில் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்தவுடன் அவரது மனைவி ஒரு நிமிடம் உறைந்து போனார். "ஏதேனும் டெட்லைனை தவறவிட்டுவிட்டோமா? அல்லது ஏதாவது தவறாகப் பேசிவிட்டோமா?" என்ற பயத்தில் அவர் இதயம் துடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இமெயிலை முழுமையாகப் பார்த்த பிறகுதான் தெரிந்திருக்கிறது, அது அவர் ஒருபோதும் வேலை செய்யாத ஒரு நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது என்பது.

எதிர்வினை

சமூக வலைதளங்களின் எதிர்வினை

இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ள சைமன், "அன்புள்ள எச்.ஆர் (HR) குழுவினரே, அடுத்த முறை இமெயில் அனுப்பும்போது முகவரியைச் சரியாகச் சரிபார்க்கவும். இல்லையெனில், மற்றவர்களுக்குத் தேவையற்ற இதய பாதிப்புகள் ஏற்படக்கூடும்" என்று கிண்டலாகக் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். "அடுத்த முறை துல்லியமான தகவல்களுடன் இமெயில் அனுப்புங்கள். இதுபோன்ற திடீர் பணிநீக்கங்களுக்கு மருத்துவக் காப்பீடு கூடப் பலன் தராது." என்று ஒரு பயனர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். பணி பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும் இன்றைய சூழலில், இதுபோன்ற கவனக்குறைவான மின்னஞ்சல்கள் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Advertisement