நெதர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் தீக்கிரை
செய்தி முன்னோட்டம்
நெதர்லாந்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'வோண்டல்கெர்க்' (Vondelkerk) தேவாலயம் பயங்கர தீ விபத்தில் சிக்கி உருக்குலைந்துள்ளது. புத்தாண்டு பிறந்த மகிழ்ச்சியில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிக்கொண்டிருந்த போது, நள்ளிரவு 12:45 மணியளவில் ஆம்ஸ்டர்டாம் நகரின் வோண்டல் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள பழமையான வோண்டல்கெர்க் தேவாலயத்தில் தீப்பிடித்தது. தீயின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், தேவாலயத்தின் கூரைப்பகுதிகள் இடிந்து விழுந்தன. தேவாலயத்தின் கோபுரம் முழுவதும் தீப்பிழம்புகளாகக் காட்சியளித்தன. முழு கட்டிடமும் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என்பதால் அந்தப் பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என Times Now செய்தி தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
WATCH: Fire engulfs top of Vondelkerk (Vondel Church) in Amsterdam, The Netherlands.
— AZ Intel (@AZ_Intel_) January 1, 2026
pic.twitter.com/8iW7AEhwdT
தீ விபத்து
நெதர்லாந்தின் பிற பகுதிகளில் தீ விபத்து
இது மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு இடங்களிலும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன: இங்குள்ள ஒரு பட்டாசு விற்பனை நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பெடம் பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடம் (Gymnasium) தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் நச்சுப் பொருட்கள் (Asbestos) காற்றில் கலந்ததால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை (NL-Alert) விடுக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்த தொடர் தீ விபத்துகள் நெதர்லாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் படையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியிலும், பாதிப்புகளைக் குறைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.