வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: பெட்ரோல் குண்டு வீசியதில் இளைஞர் பலி
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தலைநகர் டாக்காவில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தலைநகர் டாக்காவின் மோக்பஜார் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மேலிருந்து மர்ம நபர்கள் சக்திவாய்ந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு சரியாக அந்தப் பகுதியில் தேநீர் அருந்தி கொண்டிருந்த சைபுல் சியாம் என்ற இளைஞரின் தலையில் விழுந்து வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த சியாம், அப்பகுதியில் உள்ள கார் அலங்காரக் கடையில் பணியாற்றி வந்தவர்.
பதற்றம்
பின்னணியும், பிற சம்பவங்களும்
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிய வேளையில் இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) தலைவரும், முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் 15 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்ப உள்ள சூழலில், அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதேபோல் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க 'மதுர் கேன்டீன்' மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த உணவகம் மொழி இயக்கம், மக்கள் எழுச்சி மற்றும் விடுதலைப் போரின் உயிருள்ள நினைவாக அறியப்படுகிறது. இது 1921 ஆம் ஆண்டு மதுசூதன் தாஸால் தொடங்கப்பட்டது.