ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நிறுவனங்கள் செய்யவேண்டியவை
செய்தி முன்னோட்டம்
புரளி பேசும் கலாச்சாரம், போட்டி, பொறாமை ஆகியவை நிலவும் அலுவலக சூழலில், ஒரு ஊழியரின் உற்பத்தித்திறன் குறையும் எனவும், அதனால், அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மேலும், அது அவர்களின் மன ஆரோக்கியத்தை கெடுக்கிறது எனவும் தெரியவருகிறது.
தினசரி வேலைக்கு செல்லும் ஒரு நபர், அவரின் பணியிடத்தில் தான் பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால், நிறுவனங்கள் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இது குறித்து வல்லுநர்கள், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சில வழிகளை கடைபிடிக்கலாம் என கூறுகின்றனர்.
ஏழு-எட்டு மணிநேர வேலைக் கொள்கை: நிறுவனங்கள், வேலை நேரத்தை கடைபிடிக்க வேண்டும். வேலை நேரம் முடிந்ததும், அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் கூடாது.
card 2
ஊழியர்களின் நலனுக்காக நிறுவனங்கள் செய்யவேண்டியவை
ஃபிளக்சி டைமிங் அவசியம்: எந்த நேரத்திலும் அவசரநிலைகள் ஏற்படலாம். அதனால், நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு ஃபிளக்சி டைமிங் செயல்படுத்த முயலலாம் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஊழியர்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம்: ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ஊழியர்கள் வேலை பார்க்கும் இடத்தில், நிறுவனத்தால், டே-கேர் சென்டரை நடத்துவது, அல்லது, டே-கேர் சென்டரில் சேர்ப்பதற்கான பணஉதவியை செய்வது போன்றவை, ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை பற்றி கவலை இன்றி வேலை செய்ய உதவுகிறது.
உடல் பரிசோதனைகளை வழங்க வேண்டும்: நிறுவனங்கள் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகளை வழங்கினால் அல்லது அதற்கான நிதி உதவியை ஊழியர்களுக்கு வழங்கினால், அது ஊழியர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.