
குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள்
செய்தி முன்னோட்டம்
குழந்தைகளாக இருக்கும் போது கண்ணாமூச்சி விளையாடியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆனால், அதெல்லாம் பல தசாப்தங்களுக்கு முன் நடந்தது.
இப்போது, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே சென்று விளையாடுவதற்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது.
நண்பர்களுடன் பேசுவதையும் விளையாடுவதையும் கதைப்பதையும் கூட இப்போது வீட்டில் இருந்துகொண்டே கணினியின், மொபைலின் உதவியால் செய்யலாம்.
எனினும், அவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடல் உழைப்பு இல்லையென்றால், பின்னாளில் அவர்கள் மிகவும் துன்பப்படுவார்கள்.
அதனால், அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் விளையாட்டுகளின் நன்மைகளைப் பற்றி இன்று பார்க்கலாம்.
முக்கியத்துவம்
விளையாட்டுகளால் கிடைக்கும் 5 நன்மைகள்
வீட்டுக்கு வெளியே ஓடியாடி விளையாடினால் குழந்தைகளுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் இதோ:
நண்பர்களுடன் வெளியே சென்று விளையாடினால் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு சமூக மற்றும் தொடர்பு திறன்களை மேம்படுகிறது.
உடல் வியர்க்க விளையாடுவதால் உங்கள் குழந்தைகள் கவனம் சிதறாமல் இருப்பர். இது அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களை படிப்பிலும் உயர செய்கிறது.
நன்றாக விளையாடுவது அவர்களின் ஆற்றலை அதிகரிக்கிறது. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனின் ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் இளம் பருவத்தினரின் குழு உணர்வையும் தலைமைப் பண்புகளையும் வளர்க்கிறது.
கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் இது அதிக "ஹாப்பி" ஹார்மோன்களை வெளியிடுவதால் மனநலத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது