குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள்
குளிர்க் காலம் நம்மை தாக்கும் போது சூடான உணவுகளை சாப்பிடுவதற்கும், சுடச்சுட பானங்களைக் குடிக்கவும் விரும்புவோம். இது போல பருவக் காலங்களில் உங்கள் உடல் உள்ளிருந்து கதகதப்பாக இருக்க வேண்டியது அவசியமாகமாகிறது. குளிர்காலத்தில் உடலின் வெப்பத்தை தக்க வைக்கும் வேலையை, நம் சமையல் அறையில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களே செய்துவிடுகிறது. அதில் முக்கியமான ஒன்று துளசி. துளசியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. உடலை சூடாக வைத்திருக்க துளசி தேநீரை அருந்துவது சிறந்த வழியாகும். அடுத்தாக ரோஸ்மேரி, குளிர்காலத்தில் சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. குளிர்க் காலங்களில் உங்களை நாள் முழுவதும் வெதுவெதுப்பாக வைத்திருக்க ரோஸ்மேரி தேநீரை அருந்தலாம்.
உங்களை குளிர்காலத்தில் வெது வெதுப்பாக வைத்திருக்க உதவும் மூலிகைகள்
குளிர்காலங்களில் சூடாக அருந்தும் சூப்களில் கொத்தமல்லி சேர்ப்பது உடலின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவும். இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் பருவ மாற்றத்தால் ஏற்படும் பல நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து நம்மைத் தடுக்க இந்த ஊட்டச்சத்து உதவுகிறது. பிட்சாகளில் சேர்க்கப்படும் ஆரிகனோ எனப்படும் கற்பூரவல்லி, இயற்கையாகவே குளிர்காலத்தில் உடலின் வெப்பத்தை அதிகரிக்கிறது. பல குளிர்கால சூப்பர்ஃபுட்களில் வெந்தயம் ஒன்றாக கருதப்படுகிறது, ஏனெனில் வெந்திய கீரை உடலுக்கு ஊட்டமளிப்பதுடன் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவுகிறது. இது பொட்டாசியம், சல்பர், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின்கள் ஏ, பி 1 மற்றும் சி ஆகியவை அவை உடலின் சரியான செயல்பாட்டிற்கு முக்கியமானவை.