Page Loader
Gen Z டேட்டிங் அறிவுரை: உங்கள் உறவுமுறையில், கவனத்தில் கொள்ள வேண்டிய சில சிமிஞ்சைகள்
Gen Z மக்களுக்கு சில டேட்டிங் டிப்ஸ்

Gen Z டேட்டிங் அறிவுரை: உங்கள் உறவுமுறையில், கவனத்தில் கொள்ள வேண்டிய சில சிமிஞ்சைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2023
04:24 pm

செய்தி முன்னோட்டம்

ஆண்-பெண் உறவில் உள்ள எதிர்பார்ப்புகளும், தேவைகளும் தலைமுறைக்கு தலைமுறை மாறுபடுகிறது. Gen X எதிர்பார்ப்புகளையும் தாண்டி, தங்கள் உறவை காப்பாற்றுவதில் கவனமாக இருந்தனர். மில்லினியல்ஸ், உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை முக்கியமாக கருதினர். தற்போது இருக்கும் Gen Z மக்கள், தங்கள் சுதந்திரத்தை முக்கியமாக கருதுகிறார்கள். Gen Z மக்களுக்கான சில டேட்டிங் டிப்ஸ் இதோ: முற்றிலும் தவிர்க்க வேண்டிய உறவு: உங்கள் துணை, உங்கள் நடவடிக்கைகளை, ட்ராக்கர் மூலம் கண்கணிக்கிறார்களா, எப்போதும் உங்கள் குறைகளை பட்டியலிட்டு கொண்டே இருக்கிறார்களா, உங்கள் முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்களா, அவர்களின் செலவுக்கும் நீங்களே எப்போதும் பணம் தரவேண்டி உள்ளதா? இதில் ஏதேனும் ஒன்று, உங்களுக்கு அடிக்கடி நடப்பது போல உணர்ந்தால், உங்கள் உறவு டேஞ்சர் ஸோனில் உள்ளது.

உறவு

உறவை மேம்படுத்த இரண்டாம் வாய்ப்பு கொடுங்கள்

இரண்டாம் வாய்ப்பு வழங்கலாம்: சில உறவுகளில், சுய சார்பின்மை இல்லாமலும், சுய சிந்தனைகளுக்கு இடம் இல்லாமலும் இருக்கலாம். சில நேரங்களில், அவர்கள் உலகம் உங்களை சுற்றியே இயங்குவது போலவும், அந்த உலகத்தில், நீங்கள் மட்டுமே வியாபித்து இருப்பது போலவும் தோன்றலாம். அத்தகைய உறவுகளில், மனப்பொருத்தம் இல்லாமல் இருக்கும். அவர்கள், மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசி, தங்கள் எதிர்பார்ப்புகளை தெளிவாக, துணையிடம் கூறி, உங்கள் உறவை மேம்படுத்த முயற்சிக்கலாம். உஷாரய்யா உஷார்: உங்கள் துணையின் சமூக வாழ்க்கையில், உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது போல உணர்கிறீர்களா? அவர்கள் கூறும் சில கருத்துகள், உங்களை மனதளவில் புண்படுத்துவது போல தோன்றுகிறதா? இவையெல்லாம், உங்கள் உறவில் விரிசல் விழப்போகிறது என்று அர்த்தம். கவனமாக இருக்கவும்.