உங்கள் ஆரோக்கியத்தின் ட்ரைலர் உங்கள் நாக்கில் இருக்கிறது, தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
உங்கள் நாக்கு, உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய வெளிப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது உண்மைதான்!
உங்கள் நாக்கின் தோற்றம் மற்றும் நிலை ஆகியவை, உடல்நலப் பிரச்சினைகளை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடுகள் முதல் தொற்றுநோய்கள் வரை, உங்கள் நாக்கு வெளிப்படுத்தக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.
உங்கள் நாக்கு சுட்டிக்காட்டக்கூடிய சில முக்கிய உடல்நலப் பிரச்சினைகள் இதோ:
சிவப்பு நாக்கு: ஆரோக்கியமான நாக்கு, இளஞ்சிவப்பு நிறத்தில், மெல்லிய வெள்ளை பூச்சுடன் இருக்கும். ஆனால், சிவப்பு நிற நாக்கு, உடலில் நீரிழப்பு மற்றும் அதிகப்படியான வெப்பத்தைக் குறிக்கலாம். வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால், நாக்கின் நிறம் சிவப்பாகும், அதோடு, அடிக்கடி வாய் புண்களை ஏற்படுத்தும். மேலும், இரத்த சோகையைக் குறிக்கலாம்.
card 2
புற்று நோயின் அறிகுறிகளை காட்டும் நாக்கு
வெள்ளை திட்டுகள்: நாக்கின் மேலே வெள்ளை புள்ளிகள் இருந்தால், த்ரஷ் எனப்படும் பூஞ்சை தொற்று என்பதைக் குறிக்கலாம்.
லேசான வெள்ளை திட்டுகள், லிச்சென் பிளானஸின் அறிகுறியாக இருக்கலாம்.
இது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு, உங்கள் வாயில் உள்ள திசுக்களைத் தாக்கும் போது ஏற்படுகிறது.
கடினமான, தட்டையான, வெண்மையான திட்டுகள் தென்பட்டால், இது புற்றுநோயுடன் தொடர்புடைய லுகோபிளாக்கியாவாக இருக்கலாம்.
மென்மையான நாக்கு: மென்மையான நாக்கு, இரும்பு, ஃபோலிக் அமிலம் அல்லது பி வைட்டமின்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டை குறிக்கலாம் அல்லது நோய் தொற்று, செலியாக் நோய் அல்லது குறிப்பிட்ட மருந்துகளின் விளைவாக இருக்கலாம்.
எரிச்சல்: உங்கள் நாக்கில், எரியும் உணர்வை நீங்கள் அனுபவித்தால், அது பற்பசை அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்.