வாரம் முழுவதும் வேலை செய்த சோர்வா? இதோ உங்களுக்காக ஊக்கம் தரும் சில குறிப்புகள்
வாரத்தில் ஐந்து நாட்களும் ஓய்வின்றி உழைப்பவர்களா நீங்கள்? வார இறுதிக்காக எதிர்நோக்கி, வெள்ளிகிழமையை கடத்த முடியாமல் சிரமப்படுகிறீர்களா? உங்களை ஊக்கப்படுத்தும் வகையில் சில குறிப்புகள் இதோ: வார இறுதி நாட்களை எதிர்நோக்குங்கள்: வார இறுதி நாட்களில், நீங்கள் செய்யவிருக்கும் காரியங்களைப் பற்றி பட்டியலிடலாம். அது உங்களுக்கு ஒரு உந்துதலை தரும். வார இறுதி நாட்களில், நீங்கள் பிரயாணம் செல்ல திட்டமிட்டிருந்தால், அதற்காக தயார் செய்து கொள்ளுங்கள். சுலபமான வேலைக்கு முன்னுரிமை: உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளில் சுலபமான வேலையையோ அல்லது சுவாரஸ்யமான வேலையையோ, முதலில் தேர்ந்தெடுத்து, அதை முடிக்கலாம். அது மனதிற்கு ஒரு வித ஊக்கத்தை தரும்.
இசையால் உலகை வெல்லலாம்
பணி மேஜையை மாற்றி அமைக்கலாம்: நீங்கள் பணி புரியும் மேஜையை சற்றே அலங்கரித்து, மாற்றி அமைக்கலாம். மேஜை மேலே சில செடிகளை வைத்து அலங்கரிக்கலாம். புது இடம், புதிய சூழல், இவை அனைத்தும், மனதில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க உதவும். அதன் மூலம், உங்கள் வேலைகள் சுலபமாகும். உத்வேகம் தரும் இசை: உங்கள் மனதை மகிழ்விக்கும் பாடலை கேட்கலாம். இசை ஒரு அருமருந்து. கல்லையும் கரைக்கும் வலிமை பொருந்தியது. அதனால் உங்கள் மனதை குஷியாக்கும் பாடல்களை கேட்கலாம். சில ஆய்வறிக்கைகள் படி, இசையை கேட்பதால், உங்கள் உடலில், அதிக அளவு டோபமைன் சுரக்கும் என்றும், அது, உங்கள் மனதை அமைதியாக்கி, கடினமான வேலைகள் கூட இலகுவாக்கி விடும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.