
'சிரிப்பே மருந்து': உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிரிப்பு வைத்தியம்!
செய்தி முன்னோட்டம்
உலகின் சிறந்த மருந்தாக கருதப்படுவது சிரிப்பாகும்.
ஊட்டச்சத்து மனநல மருத்துவர், உமா நாயுடூவின் கூற்றுப்படி, மக்களை இணைக்கவும், உங்களை புத்துணர்ச்சியுடன் வைக்கவும், பல மனநல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமைகிறது மனிதனின் சிரிப்பு.
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், "சிரிப்பு ஒரு நேர்மறையான உணர்வையும், மன அழுத்தத்தைத் தவிர்க்க ஒரு ஆரோக்கியமான வழி" என்று கூறப்பட்டுள்ளது.
ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் மற்றொரு ஆய்வில், "உடற்பயிற்சியுடன், இந்த சிரிப்பு வைத்தியத்தையும் கடைபிடிக்கும் போது, வயதானவர்களின் மனநலம் மற்றும் உடலநலமும் மேம்படுகிறது" என்று கண்டறிந்துள்ளது.
சிரிப்பது எந்த அளவுக்கு நன்மைகளைத் தருகிறது என்று மருத்துவர் நாயுடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
மன ஆரோக்கியம்
மன அழுத்தத்தை இலகுவாக்கும் சிரிப்பு
சிரிப்பு உங்கள் ஆற்றலை அதிகரிக்கவும், உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
சிரிப்பு உங்கள் நெகிழ்ச்சி பண்பை அதிகரிக்க உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்க மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுங்கள்.
சிரிப்பு, உங்கள் உடலில் எண்டோர்பின்களின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்த எண்டோர்பின், உடலில் உள்ள வலி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க, இயற்கையாக சுரக்கும் சுரப்பி ஆகும்.
சிரிப்பு, செரோடோனினை உற்பத்தி செய்கிறது. இது கவலை, வருத்தம், வெறுமை போன்ற அதீத மனநிலைகளை சமநிலையில் வைக்கிறது.
"ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை உணரவும், நகைச்சுவையைக் கொண்டாடவும், நேரம் ஒதுக்க மறவாதீர்கள்" என்று மருத்துவர் நாயுடு கூறியுள்ளார்.