குங்குமப்பூவில் நிறைந்திருக்கும் அற்புத மருத்துவப் பயன்கள்
காலையில் எழுந்ததும் காபி அல்லது தேநீரை தேடுபவரா நீங்கள்? இனி உங்கள் நாளை குங்குமப்பூ தேநீருடன் தொடங்குங்கள். வழக்கமாக குடிக்கும் பானத்திற்கு பதிலாக, குங்கமப்பூ உங்களுக்கு அளிக்கும் நன்மைகள் அதிகம். அவை என்னவென்று பின்வருமாறு பார்ப்போம். இது குளிர்காலத்தில் உடலை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர், நீரிழிவு கல்வியாளர் மற்றும் தி ஹெல்த் பான்ட்ரியின் நிறுவனரான குஷ்பு ஜெயின் திப்ரேவாலா கூற்றுப்படி, நெய் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது, குங்குமப்பூ இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கும், உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. PCOS மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சீராக்குகிறது.
அழகிற்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உதவும் குங்குமப்பூ
2020-ஆம் ஆண்டில் ஃபிரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷன் என்ற இதழில் வெளியான ஒரு ஆய்வயை பற்றி திப்ரேவாலா குறிப்பிட்டுள்ளார். மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக இதயத் துடிப்பை சீராக்கி, மன நலத்தை மேம்படுத்துகிறது. ஆனால் இதற்கு கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என கூறப்படுகிறது. குங்கமப்பூவை சாப்பிட்டு வந்தால் உங்கள் முகம் ஒளிரும் மற்றும் முகப்பரு இல்லாத சருமத்தையும் பெறலாம். மேலும் அவர், "தினமும் 2 அல்லது 3 குங்குமப்பூ இதழ்களை இரவு முழுவது ஊறவிட்டு அந்த தண்ணீரை அருந்துவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. தொடர்ந்து 6-8 வாரங்களுக்கு சாப்பிடுவதினால் அதன் முழுப் பலன்களை பெறலாம்" என்று கூறியுள்ளார்.