Page Loader
'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை
பிரதிநிதித்துவப் படம்

'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை

எழுதியவர் Saranya Shankar
Dec 10, 2022
10:19 pm

செய்தி முன்னோட்டம்

'மெட்ராஸ்-ஐ' என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகை தொற்று நோயாகும். இவை ஒரு நபரிடம் இருந்து மற்றொவருக்கு எளிதில் பரவும். இதற்கு' மெட்ராஸ்-ஐ' என பெயர் வரக் காரணம் என்னவென்றால் இந்நோயை ஏற்படுத்தும் அடினோ-வைரஸ் முதன்முதலில் 1918-ல் மெட்ராஸில் (அதாவது இப்போதைய சென்னை) கண்டறியப்பட்டது. அதனால், இது 'மெட்ராஸ்-ஐ' என்றும் அழைக்கப்படுகிறது. வெண்படல வீக்கம், கண் சிவந்து போவது மற்றும் கண்களில் நீர்வடித்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை தொடுவது மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட இடங்களை தொடுவது போன்றவை மூலமாக பரவ வாய்ப்புள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களோ அல்லது தொற்று அறிகுறி உள்ளவர்களோ மற்றவர்களுக்கு பரவ விடாமல் முன்னெச்சரிகையாய் இருப்பது அவசியம்.

'மெட்ராஸ்-ஐ' தடுப்பு

'மெட்ராஸ்-ஐ' பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள்

சுகாதாரமான சூழ்நிலையே இந்த தொற்று பரவலை பரவ விடாமல் தடுக்க முக்கிய காரணமாகிறது. வெதுவெதுப்பான நீரில், சோப்பினாலோ அல்லது சானிட்டைசர் கொண்டோ 20 வினாடிகள் நன்றாக கழுவினால் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம். நோய் தொற்று உள்ளவர்கள் கண்ணாடி அணிவது மூலம் தொற்றை தவிர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து இருக்கவேண்டும். 'போவிடோன்-அயோடின்' இத்தொற்றின் பாக்டீரியாவுக்கு தீர்வாக உள்ளது. இதன் குறைந்த விலை காரணமாக உலகளவில் இது அனைவராலும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. தொற்று அறிகுறி தெரிந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளுவதே தொற்று மேலும் பரவாமல் தடுக்க உதவும்.