குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா?
குளிர்கால மாதங்களில் சளி மற்றும் காய்ச்சல் எல்லா இடங்களிலும் தோன்றும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் குளிர்கால பருவ மாற்றங்கள் தைராய்டு செயலிழப்பின் அறிகுறிகளையும் பிரதிபலிக்கின்றன. ஏற்கனவே தைராய்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் இன்னும் மோசமடைகின்றன. ஹைப்போ தைராய்டிசம் என்பது ஒரு ஹார்மோன் குறைபாடு ஆகும். ஹைப்போ தைராய்டிம் என்பது, உங்கள் தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோனை உருவாக்காவில்லை என்பதைக் குறிக்கிறது. தைராய்டு சுரப்பி உங்கள் கழுத்தின் கீழ் பகுதியில் முன்புறத்தில் அமைந்துள்ளது. சுரப்பியால் வெளியிடப்படும் ஹார்மோன்கள் உங்கள் இரத்த ஓட்டத்தில் பயணித்து, உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும், உங்கள் இதயம் மற்றும் மூளை, உங்கள் தசைகள் மற்றும் தோல் வரை பாதிக்கிறது.
ஹைப்போ தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள் என்ன?
பொதுவாக, தைராய்டு ஹார்மோன் உள்ள உடலின் அடிப்படை வளர்சிதை மாற்ற (metabolism) விகிதம் அதிகரித்து உடலை சூடாக வைத்திருக்க அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. ஹைப்போ தைராய்டிசம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை (metabolism) குறைப்பதால், குளிர்காலத்தின் வருகை உங்களை இன்னும் குளிர்ச்சியாக உணர வைக்கும். ஹைப்போ தைராய்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த குளிர்பதத்தை தாங்க முடியாமல் அதின் அறிகுறிகள் மோசமடைவதை கவனிக்கலாம். இதன் அறிகுறியாக உங்களின் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது, கேக் மற்றும் பிஸ்கட் இனிப்பு உணவுகளை விடுத்து அதற்கு பதிலாக சத்துக்கள் நிறைந்த பழங்களுடன் காய்கறிகள், முழு தானியங்கள், புரதம் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் போன்ற ஆரோக்கியமான உணவுத் தேர்ந்து எடுத்து உட்கொள்ளுங்கள்.