உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
வசிரிஸ்தான் குண்டுவெடிப்பில் தொடர்பா? பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா
வடக்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 13 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியதை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது.
கடற்படை தலைமைத் தளபதி மற்றும் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியை நீக்கினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நாட்டின் மக்கள் விடுதலை ராணுவம் மீதான கட்டுப்பாட்டை இறுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ராணுவத்தின் உயர் பதவியில் உள்ள முக்கிய நபர் உள்ளிட்ட பலரை நீக்கியுள்ளார்.
புதிய டிஜிட்டல் சேவை வரி விதிப்பால் கடுப்பு; கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதாக டிரம்ப் அறிவிப்பு
புதிய டிஜிட்டல் சேவை வரியை விதிக்கும் கனடாவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து, வர்த்தக பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு தடை விதிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு குறிப்பிடத்தக்க சட்ட வெற்றியாக, அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) ஒரு பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது.
நீதிமன்ற விசாரணையில் பெண் நீதிபதியை ஹனி எனக் கூறிய வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ
அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஒரு நீதிமன்ற அறையில், நேரடி ஒளிபரப்பு அமர்வின் போது, உதவி அட்டர்னி ஜெனரல் வில்லியம் கோசெலிஸ்கி தற்செயலாக ஒரு நீதிபதியை "ஹனி (Honey)" என்று அழைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
'நாங்கள் அவரைக் கொல்லும் முன்பே கமேனி தலைமறைவாகிவிட்டார்': இஸ்ரேல்
இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்ய இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் முடிந்தது, விரைவில் இந்தியாவுடன் 'மிகப் பெரிய' வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்
அமெரிக்கா, சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு "மிகப் பெரிய" ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
விசா பெற கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து social media தரவுகளையும் வெளிப்படுத்தவேண்டும்: அமெரிக்க தூதரகம்
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை, விசா விண்ணப்பதாரர்களை பின்னணி சரிபார்ப்புக்காக கடந்த ஐந்து ஆண்டுகளின் அனைத்து சமூக ஊடக பயனர்பெயர்கள் மற்றும் ஹாண்டில்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டது.
பஹல்காம் பற்றி குறிப்பிடாததற்காக SCO ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தது இந்தியா; அப்படியென்றால் என்ன?
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
இந்தியா- சீனா SCO கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்
மத்திய மெக்சிகோவின் இராபுவாடோவில் ஒரு மத விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது இருக்கும் தற்போதைய விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது
இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு அபிநந்தன் வர்த்தமானைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அதிகாரி தலிபான் மோதலில் கொல்லப்பட்டார்
2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தன் வர்தமனைக் சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, கைபர் பக்துன்க்வா பகுதியில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லை என்கிறது அமெரிக்க உளவுத்துறை; கொதித்தெழுந்த டிரம்ப்
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்கள் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.
ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டு; 'சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு' உத்தரவிட்டுள்ளது
டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, போரில் உடன் நின்ற டிரம்பிற்கு நன்றி கூறிய நெதன்யாகு
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் ஈரானுடனான போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு போர்நிறுத்தத்தினை அறிவித்த ஈரான்
அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு, தெஹ்ரானின் மறுப்பு, அதைத் தொடர்ந்து வெளிப்படையான யு-டர்ன் பின்னர் இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் என பல மணிநேர முன்னேற்றங்களுக்கு பின்னர், ஈரான் இறுதியாக போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் முழுமையான போர்நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்; மறுக்கும் ஈரான்
இஸ்ரேலும் ஈரானும் 'முழுமையான போர்நிறுத்த' ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
'ஆபரேஷன் ஹெரால்ட்ஸ் ஆஃப் விக்டரி': கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்த ஈரான்
நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தோஹாவில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி என கூறியது.
சிந்து நதி நீர் தரவில்லையென்றால் இந்தியாவோடு போர் செய்யுமாம் பாகிஸ்தான்; சொல்கிறார் பிலவால் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ராணுவ சர்வாதிகாரி ஜுல்பிகர் அலி பூட்டோ குடும்ப வாரிசுமான பிலாவல் பூட்டோ-சர்தாரி, இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வருமான வரி விதிக்கும் முதல் வளைகுடா நாடு: 2028ஆம் ஆண்டு முதல் 5% வருமான வரி விதிக்க போகும் ஓமான்
2028 ஆம் ஆண்டு முதல் 5% வருமான வரி விதிக்கும் திட்டத்தை ஓமான் அறிவித்துள்ளது. அவ்வாறு செய்யும் முதல் வளைகுடா நாடாக மாறியுள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய இஸ்ரேல்
அமெரிக்கா, ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தின் மீது குண்டுவீச்சு நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
நட்பு நாடான ஈரானுக்கு புடின் ஏன் உதவவில்லை? அவரது பதில் இதோ!
ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலில் தனது நாடு ஏன் தலையிடவில்லை என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் ராணுவ விமான தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிப்பு
இஸ்ரேல் ராணுவம், ஆறு ஈரானிய ராணுவ விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியான இலக்குவைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு, 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்ததாக அறிவித்துள்ளது.
ஈரான் மோதல்களுக்கு மத்தியில் குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்திய அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் சூழலில், சைபர் தாக்குதல்கள், பழிவாங்கும் வன்முறை மற்றும் உள்நாட்டு தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெறக்கூடும் என்று அமெரிக்கா தன்னாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவை அடிப்பது உறுதி; நேரம், இடத்தை ராணுவம் உறுதி செய்யும் என ஐநா கூட்டத்தில் ஈரான் அறிவிப்பு
ஐநா சபையின் அவசர பாதுகாப்பு கவுன்சில் அமர்வில், ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு கூர்மையான எச்சரிக்கையை விடுத்து, தனது அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் திட்டம்; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமா?
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானில் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான நடவடிக்கைக்கு ஈரானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"எதிரி நாடு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது, தண்டிக்கப்பட வேண்டும்" என அமெரிக்க தாக்குதல்கள் குறித்து ஈரான் தலைவர் கண்டிப்பு
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களை ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கடுமையாகக் கண்டித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல்; எண்ணெய் விலைகள் உயரும் அபாயம்; இந்தியாவுக்கு பாதிப்பா?
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுடன் இணைந்து, ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
அற்புதமான வெற்றி; ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு உரை
மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
தனக்கு பிறகு யார்? போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் 3 வாரிசுகளை அறிவித்தார் ஈரான் தலைவர் அலி கமேனி
இஸ்ரேலுடனான ஈரானின் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது மகன் மொஜ்தபா கமேனியை பரிசீலனையில் இருந்து விலக்கி, தனக்கு பிறகு தலைமைப் பொறுப்புக்கான வாரிசுரிமைத் திட்டங்களைத் தொடங்கும் அரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல்
இஸ்ரேல்-ஈரான் மோதலின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் மீது அமெரிக்கப் படைகள் நேரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.
ஈரான் முழுவதும் துல்லியத் தாக்குதல்களில் மூன்று உயர்மட்ட தளபதிகளை ஒரே நாளில் கொன்றது இஸ்ரேல்
ஈரானுடனான மோதலில், இஸ்ரேல் சமீபத்திய உயர் துல்லிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) மூன்று உயர் தளபதிகளைக் கொன்றது.
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டுமாம்; பாகிஸ்தான் பரிந்துரை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலைத் தணிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளை மேற்கோள் காட்டி, 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரை பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
துருக்கியில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்யப்போய் சடலமாக திரும்பிய மொசாம்பிக் பாடகி
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் 31 வயதான பாடகியும் சமூக ஊடக இன்ஃபுளூயன்சருமான அனா பார்பரா புர் புல்ட்ரினி, துருக்கியின் இஸ்தான்புல்லில் அழகை மெருகேற்றுவதற்கான காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இறந்தார்.
2028 ஆம் ஆண்டுக்குள் உலகம் 1.5°C புவி வெப்பமடைதல் வரம்பைத் தாண்டும்
2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மனிதர்கள் அதிக அளவு பசுமை இல்ல வாயுவை வெளியிடுவார்கள், இதனால் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றதாகிவிடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியா மாணவர்களை மீட்டுச் செல்வதற்காக மூடப்பட்ட வான்வெளியை திறந்தது ஈரான்
ஈரான் தனது தடைசெய்யப்பட்ட வான்வெளியை இந்தியாவின் மீட்பு விமானங்களுக்காக மட்டும் திறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதுவா இருந்தாலும் போர் முடிந்த பிறகுதான்; அமெரிக்க பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்
நடந்து வரும் மோதலில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை ஈரான் உறுதியாக நிராகரித்துள்ளது.