LOADING...
உத்தரகாண்டில் 2 இடங்களில் மேக வெடிப்பு; இடிபாடுகளில் சிக்கிய குடும்பங்கள்
தொடர் மழையால் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

உத்தரகாண்டில் 2 இடங்களில் மேக வெடிப்பு; இடிபாடுகளில் சிக்கிய குடும்பங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 29, 2025
09:03 am

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது, இதனால் பல குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன, பலர் காயமடைந்தனர். தேவாலின் மொபாட்டா பகுதியில், பலர் காணாமல் போனதாகவும், அவர்கள் வளர்த்து வந்த மாட்டுத் தொழுவமும் இடிந்து விழுந்து கிட்டத்தட்ட 15 முதல் 20 விலங்குகள் புதைந்தன எனவும் செய்திகள் கூறுகிறது. திடீர் மழையால் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கேதார்நாத் பள்ளத்தாக்கின் லாவாரா கிராமத்தில், மோட்டார் சாலையில் இருந்த ஒரு பாலம் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது. செனகாட்டிலும் நிலைமை மோசமாகிவிட்டது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் நதி நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட வீடுகளை காலி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல ருத்ரபிரயாகையில் உள்ள ஹனுமான் கோயில் நீரில் மூழ்கியுள்ளது.

மீட்பு 

மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பதிவு 

இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ்-இல் ஒரு பதிவில் வருத்தம் தெரிவித்தார். "ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பசுகேதர் தாலுகா, படேத் துங்கர் டோக் மற்றும் சாமோலி மாவட்டத்தின் தேவால் பகுதியில், மேக வெடிப்பு காரணமாக, சில குடும்பங்கள் சிக்கியுள்ளதாக சோகமான செய்தி கிடைத்துள்ளது" என்று அவர் எழுதினார். நிலைமையைக் கையாள உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தாமி உறுதியளித்தார். "உள்ளூர் நிர்வாகத்தால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் மீட்பு முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகளை பேரிடர் செயலாளர் மற்றும் மாவட்ட நீதிபதியுடன் பேசியுள்ளேன்" என்று தாமி மேலும் கூறினார்.