
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு தொழிலாளர் முதல்கட்டமாக மீட்பு
செய்தி முன்னோட்டம்
17 நாட்களாக நடைபெற்று வந்த உத்தரகாண்ட் சுரங்க பாதை மீட்பு பணி, இன்று இறுதிக்கட்டத்தை எட்டியது.
அதன்படி, எலி துளை நிபுணர்களால் கடைசி சில மீட்டர்கள், கைகளால் தோண்டப்பட்டு, தற்போது மீட்பு குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்து முதற்கட்டமாக ஒரு தொழிலாளர் வெளியே மீட்கப்பட்டார்.
குழாய் வழியே 4 -5 NRDF வீரர்கள் சுரங்கத்திற்குள் சென்றுள்ளனர் என்றும், இன்னும் சில மணி துளிகளில், தொழிலாளர்களை அழைத்து வர ஸ்ட்ரெட்சர்கள் உள்ளே அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அனைத்தும் சரியே நடக்கும் பட்சத்தில் இன்னும் 2 -3 மணிநேரத்தில் அனைத்து தொழிலாளர்களும் வெளியே வந்துவிடுவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர், மீட்பு குழுவினர்.
ட்விட்டர் அஞ்சல்
ஒரு தொழிலாளர் முதல்கட்டமாக மீட்பு
#WATCH | The first worker among the 41 workers trapped inside the Silkyara tunnel in Uttarakhand since November 12, has been successfully rescued. pic.twitter.com/Tbelpwq3Tz
— ANI (@ANI) November 28, 2023