
மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பருவமழை மெல்லத் தொடங்கும் நிலையில், மே 17ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மே 17ஆம் தேதி கனமழை சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், தெற்கிழக்கு அரபிக் கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும், இதனால், மே 15 முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் பரவலான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை
மற்ற நாட்களுக்கான மழை எச்சரிக்கை
அந்த அறிக்கைப்படி, இன்று, மே 15 நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பிருப்பதாகவும், நாளை, மே 16 ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், மே 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.