Page Loader
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: நீலகிரி, கோவைக்கு 'ரெட் அலெர்ட்' 
நீலகிரி, கோவைக்கு 'ரெட் அலெர்ட்'

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: நீலகிரி, கோவைக்கு 'ரெட் அலெர்ட்' 

எழுதியவர் Venkatalakshmi V
May 29, 2025
08:36 am

செய்தி முன்னோட்டம்

மண்டல வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் நிர்வாகம் விழிப்புடன் இருக்குமாறும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் இன்றும் (மே 29) மற்றும் நாளையும் (மே 30) மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இதில், குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுப்படி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடியதால், 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை விவரங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை விவரங்கள் 

வானிலை மையத் தலைவர் அமுதா தெரிவித்ததாவது - கடந்த ஐந்து நாட்களில் நீலகிரியில் 108 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் பகுதியில் 70 செ.மீ., மேல்பவானி மற்றும் எமரால்டு பகுதிகளில் தலா 70 செ.மீ. மழை பெய்துள்ளது. இது தவிர கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை விவரங்கள்: கோவை மாவட்டம் சின்னக்கல்லார் - 15 செ.மீ. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி - 14 செ.மீ. மேல் பவானி, சாம்ராஜ் எஸ்டேட், நாலுமுக்கு (திருநெல்வேலி) - தலா 13 செ.மீ. ஊத்து, காக்காச்சி (திருநெல்வேலி) - தலா 12 செ.மீ. சோலையார் (கோவை) - 11 செ.மீ. மாஞ்சோலை (திருநெல்வேலி), குந்தா பாலம் (நீலகிரி) - தலா 10 செ.மீ.